முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > மார்க் ராம்பிரகாஷிற்கு தடை!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மார்க் ராம்பிரகாஷிற்கு தடை!
இங்கிலாந்து முன்னாள் வீரரும் தற்போது சர்ரே அணிக்கு விளையாடுபவருமான மார்க் ராம்பிரகாஷ் 2009 சீசனில் முதலிரண்டு ஆட்டங்களில் விளையாட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

இந்த ஆண்டு தனது 100வது சதத்தை எடுத்த மார்க் ராம்பிரகாஷ் சமீபத்தில் நடைபெற்ற உள் நாட்டு கிரிக்கெட் போட்டி ஒன்றில் நடுவர்களிடமும் எதிரணி வீரரிடமும் முறை தவறி நடந்து கொண்டதால் அவருக்கு இந்த தடையுடன் 2,610 அமெரிக்க டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஓவல் மைதானத்தில் சர்ரே அணிக்கும் சசெக்ஸ் அணிக்கும் நடைபெற்ற போட்டி ஒன்றில் மார்க் ராம்பிரகாஷ் பேட் செய்யும்போது வேண்டுமென்றே ஆட்டக்களத்தில் ரன் ஓடினார் என்று அவரை முன்னாள் ஜிம்பாப்வே வீரர் மர்ரே குட்வின் கண்டித்தார். ஆனால் ஆத்திரமடைந்த மார்க் ராம்பிரகாஷ் தவறை உணராமல் குட்வின்னிடம் சண்டைக்கு சென்றார்.

மார்க் ராம்பிரகாஷ் சதம் எடுத்து முடித்த பிறகு குட்வின்னை நோக்கி ஆவேசமான செய்கை ஒன்றைச் செய்ததோடு, நடுவரை நோக்கி மட்டையை தாக்குவது போல் காட்டினார்.

இதனை விசாரித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ராம் பிரகாஷ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இந்த தடையை விதித்துள்ளது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
இந்தியா "ஏ" தோல்வி! தொடர் டிரா!
சி.ஏ.பி.: டால்மியா-முகர்ஜீ மோதல்!
ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்களுக்கு விசா வழங்கப்படவில்லை
வார்னேவின் சிறந்த வீரர் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம்!
பயிற்சி ஆட்டம் டிரா! யுவ்ராஜ் சதம்!
சச்சினுக்கு மெக்ரா, ரிச்சர்ட்ஸ் புகழாரம்!