முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > இந்தியா "ஏ" தோல்வி! தொடர் டிரா!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
இந்தியா "ஏ" தோல்வி! தொடர் டிரா!
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்திய, நியூஸீலாந்து "ஏ" அணிகளுக்கு இடையேயான இரண்டாவது இறுதி டெஸ்டில் இந்தியா ஏ தோல்வி தழுவியது. இதன் மூலம் 2 டெஸ்ட்கள் கொண்ட இந்த தொடர் 1-1 என்று சமன் ஆனது.

107/3 என்று தங்களது 2-வது இன்னிங்சை துவங்கிய நியூஸீலாந்து "ஏ", 7 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. அந்த அணியின் குப்தில் 41 ரன்களையும், மார்ஷல் 43 ரன்களையும் எடுத்தனர்.

இந்தியா "ஏ" தரப்பில் அமித் மிஷ்ரா 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

வெற்றி பெற 234 ரன்கள் என்ற இலக்குடன் 60 ஓவர்கள் இருந்த நிலையில் களமிறங்கிய இந்திய அணி மோசமாக விளையாடி 100 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. துவக்க வீரர் குக்ரெஜா மட்டும் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்ட்ரேலிய தொடருக்கு எதிராக தேர்வு செய்யப்பட்ட சௌரவ் கங்கூலி முதல் இன்னிங்சில் 14 ரன்களையும், இரண்டாவது இன்னிங்சில் 6 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆட்ட நிலவரம்:

நியூஸீலாந்து "ஏ" 315 ரன்கள் மற்றும் 194/7 டிக்ளேர்
இந்தியா "ஏ" 276 மற்றும் 100 ஆல் அவுட்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
சி.ஏ.பி.: டால்மியா-முகர்ஜீ மோதல்!
ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர்களுக்கு விசா வழங்கப்படவில்லை
வார்னேவின் சிறந்த வீரர் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம்!
பயிற்சி ஆட்டம் டிரா! யுவ்ராஜ் சதம்!
சச்சினுக்கு மெக்ரா, ரிச்சர்ட்ஸ் புகழாரம்!
ஆஸி.க்கு எதிரான பயிற்சி ஆட்டம்: வாரியத் தலைவர் அணி-110/2