முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > வார்னேவின் சிறந்த வீரர் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம்!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வார்னேவின் சிறந்த வீரர் பட்டியலில் சச்சினுக்கு முதலிடம்!
ஆஸ்ட்ரேலியாவின் ஓய்வுபெற்ற சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னேவின் சிறந்த 100 கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர் முதலிடம் பிடித்துள்ளார்.

PTI PhotoFILE
கடந்த 2ஆம் தேதி வெளியிடப்பட்ட “ஷேன் வார்னேஸ் செஞ்சுரி” என்ற புத்தகத்தில் சேன் வார்ன் தேர்வு செய்துள்ள 100 கிரிக்கெட் வீரர்களில் சச்சின் உட்பட 10 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இதில் சச்சின் குறித்து வார்னே விவரித்துள்ள கருத்துகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளது. பேட்ஸ்மென்கள் வரிசையில் சச்சின்தான் மிகச் சிறந்தவர் என்றும், அவருடைய அபார ஒழுக்கம் மற்றும் கிரிக்கெட் குறித்த அறிவுத்திறன் அவருக்கு உலகின் நம்பர்-1 வீரர் அந்தஸ்தை வழங்கியுள்ளது என்றும் வார்னே குறிப்பிட்டுள்ளார்.

சச்சின் ஆட்டத்திறன் குறித்து வார்னே குறிப்பிடுகையில், ஒருபந்தை முன்வந்து விளையாட வேண்டுமா அல்லது பின்சென்று விளையாட வேண்டுமா என்பதை சச்சின் எளிதாக கணித்து விடுவார். அப்படிக் கணித்து விட்டால் அதிலிருந்து ஒருபோதும் மாற மாட்டார் என்பதால் அவருக்கு எதிராகப் சுழற்பந்து வீசுவது கடினமான விடயம்தான்.

மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவு வீரர் பிரையன் லாராவுக்கு வார்னேவின் பட்டியலில் 2வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற இந்திய வீரர்களான ராகுல் டிராவிட், வி.வி.எஸ்.லஷ்மண், ஹர்பஜன்சிங், வீரேந்தர் ஷேவாக், அனில் கும்ப்ளே, கபில்தேவ், முகமது அசாருதீன், திலிப் வெங்சர்க்கர், ரவிசாஸ்‌‌‌திரி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், சவுரவ் கங்கூலிக்கு வார்னே பட்டியலில் 96வது இடம் வழங்கப்பட்டுள்ளது. கங்கூலி- வார்னே இடையே சிறிதளவு நட்புறவு உள்ளதே இதற்கு காரணம் என்றும் ஒருதரப்பினர் கூறுகின்றனர். சமீபத்தில் இந்தியாவில் நடந்த இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
பயிற்சி ஆட்டம் டிரா! யுவ்ராஜ் சதம்!
சச்சினுக்கு மெக்ரா, ரிச்சர்ட்ஸ் புகழாரம்!
ஆஸி.க்கு எதிரான பயிற்சி ஆட்டம்: வாரியத் தலைவர் அணி-110/2
ஹஸ்ஸி-கிளார்க் அபாரம்: 314 ரன்னுக்கு ஆட்டமிழந்தது ஆஸி!
‌பியூ‌ஷ் சா‌வ்லா ப‌ந்து ‌வீ‌ச்‌சி‌ல் ஆஸி. ‌திணற‌ல்- 268/9
பயிற்சி ஆட்டத்தில் மைக் ஹசி அரைசதம்: ஆஸி.-191/4