நியூஸீலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி அந்நாட்டுடன் 5 ஒருநாள், 2 டெஸ்ட் மற்றும் ஒரு இருபது-20 போட்டியில் விளையாடுகிறது.
இதுதொடர்பாக நியூஸீலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்தாண்டு மார்ச் மாதத்தில் இந்திய அணி நியூஸீலாந்து வர உள்ளதாகவும், மார்ச் 6ஆம் தேதி இரு அணிகளுக்கு இடையிலான இருபது-20 சர்வதேச போட்டி வெலிங்டனில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் தொடர் விவரம்:
மார்ச் 8 - முதல் ஒருநாள் (நேப்பியர்)
மார்ச் 11 - 2வது ஒருநாள் (ஹேமில்டன்)
மார்ச் 14 - 3வது ஒருநாள் (ஆக்லாந்து)
மார்ச் 17 - 4வது ஒருநாள் (வெலிங்டன்)
மார்ச் 20 - 5வது ஒருநாள் (கிறிஸ்ட்சர்ச்)
டெஸ்ட் தொடர் விவரம்:
முதல் டெஸ்ட்: மார்ச் 26-30 (ஹேமில்டன்)
2வது டெஸ்ட்: ஏப்ரல் 3-7 (வெலிங்டன்)
|