முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள் > அடுத்தடுத்து விக்கெட் சரிவு: 258 ரன்னில் சுருண்டது இந்தியா!
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அடுத்தடுத்து விக்கெட் சரிவு: 258 ரன்னில் சுருண்டது இந்தியா!
கொழும்பில் நடந்து வரும் 4வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற 259 ரன்களை வெற்றி இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது. அணித் தலைவர் தோனி-ரெய்னா இணை சிறப்பாக விளையாடினாலும், கடைநிலை ஆட்டக்காரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 258 ரன்களுக்கு சுருண்டது.

துவக்க வீரர் விராட் கோஹ்லி 51 ரன்களில் ஆட்டமிழந்ததைத் தொடந்து, ரெய்னாவுடன் இணைந்த அணித் தலைவர் தோனி சிறப்பாக விளையாடினார். இதில் முதலில் அரைசதம் கடந்த ரெய்னா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியின் ரன் எண்ணிக்கை விறுவிறு என உயர்ந்தது.

மறுமுனையில் தோனி பொறுப்பாக விளையாடி ரன் எண்ணிக்கை குறையாமல் பார்த்துக் கொண்டார். 76 ரன்கள் எடுத்த நிலையில் ரெய்னா ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து விக்கெ‌ட்டுக‌ள் சரிய‌த் துவங்கியது.

அடுத்த சில நிமிடத்திலேயே தோனி 71 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறியதால் இந்திய அணி 232 ரன்களுக்கு 5வது விக்கெட்டை பறிகொடுத்தது. சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட பத்ரிநாத் 6 ரன்களிலும், கடைநிலை ஆட்டக்காரர்களான ஹர்பஜன் 2 ரன்னிலும், பிரவீன்குமார் 2 ரன்னிலும், முனாஃப் படேல் ஒரு ரன்னிலும், ஜாகீர்கான் ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

முடிவில் 49.4வது ஓவரில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 258 ரன் எடுத்தது.

இலங்கை தரப்பில் துஷாரா 5 விக்கெட்டும், வாஸ், குலசேகரா, முரளிதரன், மெண்டிஸ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
மேலும்
இந்தியா 121/3 (25 ஓவர்கள்)
பாக்.கிரிக்கெட் வாரியம் மீது சோஹைல் தாக்கு!
வாஸ் 400 விக்கெட்டுகள்! இந்தியா 51/2 (12)
செப்.28-ல் இரானி கோப்பை கிரிக்கெட்!
4-வது ஒரு நாள்: இந்தியா முதலில் பேட்டிங்!
பிராட் அபாரம்: தென் ஆப்பிரிக்கா படுதோல்வி!