லண்டன்: ஐ.சி.சி. கிரிக்கெட் குழுவிலிருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் மைக்கேல் ஹோல்டிங் விலகினார்.
2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சர்ச்சைக்குரிய ஓவல் டெஸ்ட் போட்டியின் முடிவை மாற்றியதால் அதிருப்தி அடைந்த அவர் பதவியை உதறியதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி பந்தை சேதம் செய்யாமல் இருந்திருக்கலாம், ஆனால் மைதானத்தில் களமிறங்க மறுத்ததற்கு தண்டனை இருந்தேயாக வேண்டும் என்று தான் கருதுவதாக மைக்கேல் ஹோல்டிங் கூறியுள்ளார்.
இங்கிலாந்து உள் நாட்டுப் போட்டி ஒன்றில் வர்ணனை செய்து கொண்டிருந்த ஹோல்டிங், தன்னால் ஐ.சி.சி.யின் ஓவல் டெஸ்டை டிரா என்று அறிவித்த முடிவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றார். இதனால் தன்னால் தொடர்ந்து கிரிக்கெட் குழுவில் இருக்க முடியாது என்று பதவி விலகல் கடிதத்தை ஐ.சி.சி-யிற்கு அனுப்பியுள்ளார்.
இப்போதெல்லாம் நிறைய விஷயங்கள் நடக்கின்றன, ஆனால் நான் எதிலும் பங்கேற்க விருப்பம் கொள்ளவில்லை என்று ஐ.சி.சி. நடவடிக்கைகள் குறித்து அவர் கூறினார்.
|