முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
4-வது ஒரு நாள்: கடைசி பந்தில் ஆஸி. வெற்றி!  Search similar articles
ஆஸ்ட்ரேலிய மேற்கிந்திய தீவுகளுக்கிடையான 4-வது ஒரு நாள் போட்டியில் பரபரப்பான முறையில் கடைசி பந்தில் ஆஸ்ட்ரேலியா வெற்றி பெற்றது. இதனால் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட இத்தொடரில் 4- 0 என்று முன்னிலை வகிக்கிறது.

பூவதலையா வென்ற மேற்கிந்திய அணித் தலைவர் கிறிஸ் கெய்ல் முதலில் ஆஸ்ட்ரேலியாவை பேட் செய்ய அழைத்தார். துவக்க வீரர்கள் ஷான் மார்ஷ் (16), ஷேன் வாட்சன் (20) ஆகியோர் ஆட்டமிழக்க 12-வது ஓவரில் 56/2. டேரன் போவெல் இந்த 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

அதன் பிறகு மைக் ஹஸ்ஸியும், ஆஸி. அணித்தலைவர் மைக்கேல் கிளார்க்கும் இணைந்து 50 ரன்களை சேர்த்தனர். மைக் ஹஸ்ஸி 37 ரன்களுக்கு டேரன் சம்மியிடம் ஆட்டமிழந்தார். உடனடியாக மைக்கேல் கிளார்க்கும் 36 ரன்கள் எடுத்து மில்லர் பந்தில் ஆட்டமிழந்தார் இதனால் ஆஸ்ட்ரேலியா 29-வது ஓவரில் 129/4 என்று ஆனது.

ஆனால் அதன் பிறகு ஆன்ட்ரூ சைமன்ட்ஸும் அதிரடி வீரர் டேவிட் ஹஸ்ஸியும் ஆட்டத்தின் போக்கை திசை திருப்பினர். இருவரும் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 17 ஓவர்களில் 127 ரன்களை விளாசினர். சைமன்ட்ஸ் 78 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகள் 2 சிக்சர் சகிதம் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஜேம்ஸ் ஹோப்ஸ் உடனடியாக பூஜ்ஜியத்தில் ஆட்டமிழந்தார். டேவிட் ஹஸ்ஸி 50 ரன்கள் எடுத்தார். ஆஸ்ட்ரேலியா 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்தது.

மேற்கிந்திய அணியில் போவெல், எட்வர்ட்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

மேற்கிந்திய அணி இலக்கை துரத்தியது. சேவியர் மார்ஷல் ரன் எடுக்காமல் பிரட் லீயின் வேகப்பந்திற்கு இரையானார். ஆனால் அதன் பிறகு கிறிஸ் கெய்ல் அதிரடி ஆட்டம் ஆடினார், இவர் சர்வாண் (63) சந்தர்பால் (53) பிராவோ (31) ஆகியோருடன் இணைந்து விளையாடினார்.

92 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் கெய்ல் 92 ரன்களை விளாசி அணியை வெற்றியின் பக்கம் திரும்ப வைத்தார். ஆனால் இவர் ஆட்டமிழந்தவுடன், சந்தர்பால், பிராவோ இணைந்து ஸ்கோரை 247/3 என்று வெற்றிக்கு அருகாமைக்கு இட்டுச்சென்றனர்.

ஆனால் 7 ஓவர்களில் மேலும் 36 ரன்களே தேவை என்ற நிலையில் பிராவோ ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு சந்தர்பால் போராடிப்பார்த்தார். அவர் 53 ரன்களுக்கு ஆட்டமிழக்கும்போது 49வது ஓவர் முடிவில் மேற்கிந்திய அணி 275/6 என்று இருந்தது.

கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவைப்பட்டது. ஷேன் வாட்சன் ப‌ந்து ‌வீச வ‌ந்தா‌ர். ‌வி‌க்கெ‌ட் கீப்பர் ராம்தின் முதல் பந்தை 1 ரன்னுக்கு தட்டிவிட்டார். இவ்வாறு வாட்சன் வீசிய அந்த அபாரமான ஓவரில் 6 சிங்கிள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி பந்தில் 3 ரன்கள் தேவை எனும்போது ஸ்கோரை சமன் செய்யக்கூட முடியாமல் ஒரு ரன்னை மட்டுமே சம்மி எடுத்தார்.

இதனால் ஆஸ்ட்ரேலியா கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்ட்ரேலியாவில் பிரட் லீ அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

ஆட்ட நாயகனாக ஆன்ட்ரூ சைமன்ட்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும்
பாகிஸ்தான் ஆறுதல் வெற்றி!
அக்தர் தடை நீங்கியது!
ஐ.சி.சி.யிட‌ம் இழ‌ப்‌பீடு கே‌ட்‌கிறா‌ர் இன்ஸமாம்!
இருபதுக்கு 20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வே விலகல்!
இங்கி. சர்ச்சை வெற்றி டிராவாக மாறியது!
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா!