இங்கிலாந்தில் 2009-ஆம் ஆண்டு நடைபெறும் 2-வது இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கவில்லை என்று ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
துபாயில் நடைபெற்று வரும் ஐ.சி.சி. ஆண்டுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் ஐ.சி.சி. உறுப்பினர் பதவியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
ஜிம்பாப்வேயில் உள்ள அரசியல் ஒடுக்குமுறைகள் காரணமாகவும், ஐ.சி.சி. கிரிக்கெட் வளர்ச்சிக்கு கொடுக்கும் உதவித் தொகைகளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாகவும் ஜிம்பாப்வேயை ஐ.சி.சி. உறுப்பினர் தகுதியிலிருந்து விலக்கவேண்டும் என்று இங்கிலாந்து உள்ளிட்ட கிரிக்கெட் வாரியங்கள் கூறிவந்தன.
ஆனால் இந்தியா இதற்கு எதிர்ப்பு காட்டி வந்தது. இந்தக் கூட்டத்தில் கூட இந்தியாவின் ஆலோசனைப்படிதான் இருபதுக்கு 20 உலகக் கோப்பை போட்டிலிருந்து ஜிம்பாப்வே விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
|