தனது சொந்த இணையதளத்தில் இந்திய அணியைப் பற்றியக் கருத்துகளை எழுதக்கூடாது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பயிற்சியாளர் கேரி கர்ஸ்டனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
"ஆட்டம் முடிந்த பிறகு அணியை பற்றி பத்திகளில் கருத்துகளை கேரி கர்ஸ்டன் வெளியிட முடியாது" என்று பி.சி.சி.ஐ. தலைமை நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
மேலும், அணித் தலைவர்தான் செய்தித்தாள், இணையதளங்களில் எழுதலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அவர் தனது இணையதளத்தில் அணித் தேர்வில் சுழற்சி முறை தேவை என்றும், ஒரு நாள் அணித் தலைவர் தோனிக்கு ஓய்வு தேவைப்படுகிறது என்றும் எழுதியதாகத் தெரிகிறது.
கடந்த வாரம் இந்திய அணித் தேர்வுக் குழுத் தலைவர் வெங்சர்க்காருக்கும் இதே எச்சரிக்கை செய்து தாக்கீது அனுப்பியுள்ளது பி.சி.சி.ஐ. என்பது குறிப்பிடத்தக்கது.
|