இந்தியாவுக்கு முக்கியமான இன்றைய போட்டியில் பூவா தலையா வென்று முதலில் இலங்கை அணி பேட்டிங் செய்கிறது.
தொடக்க வீரர்களாக சனத் ஜெயசூர்யாவும், சங்கக்கராவும் களம் இறங்குகின்றனர்.
இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. பியூஸ் சால்வாவுக்கு பதிலாக ஓஜாவும், யூசுப் பத்தானுக்கு பதிலாக ஆர்.பி.சிங்கும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி: தோனி (தலைவர்) சேவாக், கம்பீர், சர்மா, யுவராஜ் சிங், ரெய்னா, இர்பான் பத்தான், பிரவீண் குமார், ஓஜா, ஆர்.பி.சிங், இசாந்த் சர்மா.
இலங்கை அணி: ஜெயவர்த்தனே (தலைவர்) ஜெயசூர்யா, சங்கக்கரா, கபுகேரா, சில்வா, தில்சான், குலசேகரா, மிரண்டோ, பெர்னாண்டோ, வீரரத்னே, முரளிதரன்
இன்றைய போட்டியில் இலங்கையுடன் இந்தியா தோல்வி அடைந்து, நாளை நடக்கும் கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் வங்கதேசத்தை வீழ்த்தும் பட்சத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளியுடன் சமநிலை வகிக்கும். அப்போது ரன்ரேட் அடிப்படையில் இறுதிப்போட்டி அணி தேர்வாகும்.
|