கராச்சி: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை ஒரு நாள் போட்டியில் நாளை இர்ஃபான் பத்தான் விளையாட வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன் தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக முதல் 3 போட்டிகளில் விளையாட முடியாத இர்ஃபான் பத்தான், தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நாளை பாகிஸ்தான் அணி வாழ்வா சாவா போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. நாளை தோல்வியை தழுவினால் பாகிஸ்தான் வெளியேறும் நிலை உள்ளது.
இந்நிலையில் சற்றே தடுமாறும் இந்திய பந்து வீச்சு வரிசையில் பத்தானின் வரவு பலம் சேர்க்கும் என்று பயிற்சியாளர் கேரி கர்ஸ்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
|