முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஆசியக் கோப்பை அடுத்த சுற்று அட்டவணை!  Search similar articles
ஆறு நாடுகள் பங்கேற்று விளையாடிவரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் லீக் சுற்று ஆட்டங்களில் ஹாங்காங், யு.ஏ.இ. அணிகள் வெளியேறிய நிலையில் நாளை அடுத்த சுற்று சூப்பர்- 4 ஆட்டங்கள் துவங்குகின்றன.

சூப்பர்- 4-க்கு தகுதி பெற்ற அணிகளில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தியதாலும், வங்கதேசத்தை இலங்கை வீழ்த்தியதாலும் இந்த இரு அணிகளும் சூப்பர்- 4 சுற்றில் 2 புள்ளிகளுடன் செல்கிறது. பாகிஸ்தான் அணி புள்ளிகள் எதுவும் இல்லாமல் செல்கிறது.

இந்த போட்டிகளில் முதல் இரண்டு இடங்களில் வரும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றன.

இந்த ஆட்டங்களும் பகலிரவு ஆட்டங்களாகவே நடைபெறுகிறது.

போட்டி அட்டவணை:

ஜூன் - 28; சனிக்கிழமை: இந்தியா-வங்கதேசம்; கராச்சி.

ஜூன் - 29; ஞாயிற்றுக்கிழமை: பாகிஸ்தான்-இலங்கை; கராச்சி.

ஜூன் - 30; திங்கட்கிழமை: வங்கதேசம்-இலங்கை; கராச்சி.

ஜூலை- 2; புதன்கிழமை: இந்தியா-பாகிஸ்தான்; கராச்சி.

ஜூலை- 3; வியாழக்கிழமை: இந்தியா-இலங்கை; கராச்சி.

ஜூலை- 4; வெள்ளிக்கிழமை: பாகிஸ்தான் - வங்கதேசம், கராச்சி.

ஜூலை- 6; ஞாயிற்றுக்கிழமை: இறுதிப் போட்டி; கராச்சி.
மேலும்
ஜிம்பாப்வே கிரிக்கெட்டை முடக்க இந்தியா எதிர்ப்பு!
காலிங்வுட்டிற்கு 4 போட்டிகள் தடை!
இலங்கை எளிதான வெற்றி!
சேவாக் அதிரடி! இந்தியா வெற்றி!
பாகிஸ்தான் முதலில் பேட்டிங்!
வெள்ளி விழாவில் வீரர்கள் உணர்ச்சி மயம்!