முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஜிம்பாப்வே கிரிக்கெட்டை முடக்க இந்தியா எதிர்ப்பு!  Search similar articles
அடுத்த வாரம் துபாயில் நடைபெறும் ஐ.சி.சி. ஆண்டுக் கூட்டத்தில் ஜிம்பாப்வேயை ஐ.சி.சி.யிலிருந்து வெளியேற்றும் செயல்களை இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்க்கவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜிம்பாப்வேயின் அரசியல் நிலவரங்கள் காரணமாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜிம்பாப்வேயுடனான கிரிக்கெட் இருதரப்பு உறவுகளை முறித்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த வாரம் துபாயில் நடைபெறும் ஐ.சி.சி. ஆண்டுக் கூட்டத்தில் ஜிம்பாப்வே குறித்து நடத்தப்படும் விவாதத்தின் போது ஜிம்பாப்வே கிரிக்கெட்டிற்கு தன் ஆதரவை இந்தியா தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டிற்கு இந்தியா எப்போதும் ஆதரவு அளித்து வருவதாகவும், கிரிக்கெட்டிற்கும் அங்குள்ள அரசியல் நிலவரங்களையும் முடிச்சுப் போடக்கூடாது என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய வட்டாரங்கள் தெரிவிப்பதாக லண்டனில் வெளியான பத்திரிக்கை செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஐ.சி.சி. உயர்மட்டக் குழு விவாதத்திற்கு இந்த விவகாரம் வந்தபோது கிரிக்கெட்டையும் அரசியலையும் கலக்கக்கூடாது என்ற முடிவு எட்டப்பட்ட பிறகு மீண்டும் இந்தப் பிரச்சனை எழுப்பப்படுவது ஆச்சரியமாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாக அந்த பத்திரிக்கை செய்தி கூறியுள்ளது.

அடுத்த வார ஆண்டுக் கூட்டத்தில் ரே மாலிக்கு அடுத்தபடியாக பொறுப்பேற்கவுள்ள ஐ.சி.சி. தலைவர் டேவிட் மோர்கன், ஜிம்பாப்வேயிற்கு எதிரான நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்று கூறினாலும், இந்தியாவின் நிலைப்பாடு இதில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் எந்த ஒரு முடிவும் கடினமானதே என்று எச்சரிக்கை செய்துள்ளார்.
மேலும்
காலிங்வுட்டிற்கு 4 போட்டிகள் தடை!
இலங்கை எளிதான வெற்றி!
சேவாக் அதிரடி! இந்தியா வெற்றி!
பாகிஸ்தான் முதலில் பேட்டிங்!
வெள்ளி விழாவில் வீரர்கள் உணர்ச்சி மயம்!
பால் காலிங்வுட்டு‌க்கு தடை விதிக்கப்படலாம்!