ஒரு ஆண்டிற்குள் இரண்டாவது முறையாக காலிங்வுட் தலைமையின் கீழ் இங்கிலாந்து அணி குறித்த நேரத்தில் ஓவர்களை வீசி முடிக்காததால் ஐ.சி.சி. ஆட்ட நடுவர் காலிங்வுட் 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதித்தார்.
இதனால் நியூஸீலாந்து அணிக்கு எதிரான இறுதி, 5-வது ஒரு நாள் போட்டியில் காலிங்வுட் விளையாட முடியாததால் அவருக்கு பதிலாக கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து கேப்டன் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிஸ்டலில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் குறித்த நேரத்தில் இங்கிலாந்து 2 ஓவர்கள் குறைவாக வீசியது. தற்போது நியூஸீலாந்து அணிக்கு எதிராக ஓவலில் 3 ஓவர்கள் குறைவாக வீசியது. இதனால் அது ஐ.சி.சி. விதிகளில் உயர் மட்ட 3-ம் பிரிவு விதி மீறலாக ஆனது.
இதனையடுத்து ஓராண்டிற்குள் இரண்டாவது முறையாக இது போன்று நிகழ்ந்ததால் ஐ.சி.சி. விதிகளின் படி அவர் 4 ஒரு நாள் போட்டிகளுகு தடை செய்யப்பட்டார்.
|