முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
யு.ஏ.இ.அணியை வென்றது வங்கதேசம்!  Search similar articles
லாகூரில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் யு.ஏ.இ. அணியை வங்கதேச அணியை ‌வீ‌ழ்‌‌த்‌‌தியது.

`ஏ' பிரிவில் நடந்த ஆட்டத்தில் பூவா தலையா வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

வங்கதேச அணி தொடக்க ஆட்டக்காரர் நசிமுதீன் (2 ரன்) விக்கெட்டை விரைவில் பறிகொடுத்தாலும், 2-வது விக்கெட்டுக்கு இணைந்த தமிம் இக்பால், கேப்டன் முகமது அஷ்ரபுல் ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கம் அளித்தனர்.. ஸ்கோர் 107 ரன்களாக உயர்ந்த போது, தமிம் இக்பால் (40 ரன்) ரன்-அவுட் ஆனார்.

இதையடுத்து அஷ்ரபுலுடன் 3-வது விக்கெட்டுக்கு இணைந்த ரகிபுல் ஹசனும் சிறப்பான ஒத்துழைப்பு அளித்தார். இந்த இணையின் ஆட்டம் வங்கதேசம் வலுவான ஸ்கோரை எட்ட உதவியது. 56 ரன்களில் கேட்சில் இருந்து தப்பிய அஷ்ரபுல், அந்த வாய்ப்பை பயன்படுத்தி தனது 2-வது சதத்தை நிறைவு செய்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது.

அதிரடியாக ஆடிய ரகிபுல் ஹசன் 83 ரன்கள் (63 பந்து, 9 பவுண்டரி) விளாசி ஆட்டம் இழந்தார். அதே ஓவரில் அஷ்ரபுல்லும் வெளியேறினார். அவர் 109 ரன்கள் (126 பந்து, 8 பவுண்டரி) குவித்தார்.

50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. கடைசி 10 ஓவர்களில் வங்கதேச அணி 91 ரன்கள் சேர்த்தது. வங்கதேச அணி ஒரு நாள் போட்டியில் 300 ரன்களை தொடுவது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பாக 2006-ம் ஆண்டு போக்ராவில் நடந்த ஆட்டத்தில் கென்யாவுக்கு எதிராக 301 ரன்கள் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது

அடுத்து 301 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆடிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 45.4 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியில் அதிகபட்சமாக குர்ரம் கான் 78 ரன்களும் (81 பந்து), அர்ஷத் அலி 41 ரன்களும் எடுத்தனர். வங்காளதேசம் தரப்பில் அப்துர் ரசாக் 3 விக்கெட்டுகளும், மக்முதுல்லா, கபாலி தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்கள். அஷ்ரபுல் ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.
மேலும்
பாகிஸ்தான் அபார வெற்றி!
ஐ.பி.எல்-இல் விளையாட இங்கிலாந்தை உதற வீரர்கள் தயார்!
பாகிஸ்தான், வங்கதேசம் முதலில் பேட்டிங்!
1983 வெற்றி அணி லண்டன் புறப்பட்டது!
ஜிம்பாப்வேயுடன் கிரிக்கெட் உறவுகள் தெ.ஆ. துண்டிப்பு!
ஆசிய கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்: வ‌ங்கதேச‌ம்-யு.ஏ.இ., பா‌கி‌ஸ்த‌ா‌ன்- ஹா‌ங்கா‌ய் மோத‌ல்!