இலங்கை பன்முக ஆட்டக்காரர் ஃபர்வீஸ் மஹரூஃப் காயமடைந்ததால் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு பதிலாக இடது மித வேகப்பந்து வீச்சாளர் திலன் துஷாரா இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மஹரூஃபின் அடிவயிற்று இடது பகுதித் தசையில் காயம் ஏற்பட்டுள்ளது என்று ஸ்கேனில் தெரிய வந்துள்ளது. இதனால் அவருக்கு 6 வாரகால ஓய்வு தேவைப்படும் என்று அந்த அணியின் உடற்பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 79 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் 104 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள மஹரூஃப் 24 ரன்கள் என்ற சராசரியில் இந்த விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இடது கை வேகப்பந்து வீச்சாளர் துஷாரா இந்த ஆண்டின் துவக்கத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தன் டெஸ்ட் வாழ்வை துவங்கினார்.
|