ஆஸ்ட்ரேலிய அணியின் துணைத் தலைவர் மைக்கேல் கிளார்க் மேற்கிந்திய பயணத்திலிருந்து சொந்த காரணங்களுக்காக விலகுவதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்ட்ரேலிய அணி சனிக்கிழமையன்று பிரிஸ்பேனிலிருந்து மேற்கிந்திய தீவுகளுக்கு கிளம்புகிறது.
மைக்கேல் கிளார்க்கிற்கு பதிலாக பிராட் ஹாட்ஜ் சேர்க்கப்பட்டுள்ளதால், ஐ.பி.எல்.-இல் கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாடி வரும் ஹாட்ஜ் உடனடியாக நாடு திரும்பவேண்டியுள்ளது.
கிளார்க் வரும் வரை அணியின் துணைத் தலைவராக மைக் ஹஸ்ஸி நியமிக்கப்பட்டுள்ளார்.
|