சிறிசாந்தை அறைந்த விவகாரத்தை விசாரிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினால் நியமிக்கப்பட்ட சுதிர் நானாவதி ஆணையத்தின் முன் ஹர்பஜன், சிறிசாந்த் ஆகியோர் ஆஜராக அகமதாபாத் வந்தனர்.
விசாரணை இன்று மதியம் 2 மணியளவில் துவங்கி நடைபெற்று வருகிறது. வழக்கறிஞர் நானாவதி ஏற்கனவே அந்த ஆட்டத்தின் கள நடுவர் அமிஷ் சஹேபா மற்றும் ஐ.பி.எல். ஆட்ட நடுவர் ஃபரூக் இஞ்சினியர் ஆகியோரின் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளார்.
விசாரணை அறிக்கை பி.சி.சி.ஐ. தலைவர் ஷரத் பவார் பார்வைக்கு அனுப்பப்பட்ட பிறகு வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் முடிவிற்கு அனுப்பிவைக்கப்படும்.
|