கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தியது
மழை பெய்ததால் 16 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டது. பூவா தலையா வென்ற கொல்கத்தா அணி, முதலில் பேட் செய்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ஹஸ்ஸி 26 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். சோப்ரா (2), ஹாட்ஜ் (10) ரன்கள் எடுத்து அவுட்டாயினர்.
கங்குலி 22 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
தைபு (15), சுக்லா (11), முரளி கார்த்திக் (17) அவுட்டான பிறகு சஹா 17 ரன்களுடனும், உமர் குல் 6 ரன்களுடனுடம் அவுட்டாகாமல் இருந்தனர். கொல்கத்தா அணி 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது.
கோல்கத்தா அணியில் ஸ்டெய்ன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் ஆடிய பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
ஆட்ட முடிவில் அந்த அணியின் பவுச்சர் 40 பந்துகளில் அரை சதம் அடித்து அவுட்டாகாமல் இருந்தார். அருண்குமார் 22 ரன்களுக்கு அவுட்டானார். சந்தர்பால் 7 ரன்களும், திராவிட் 5 ரன்களும் எடுத்து அவுட்டாயினர். வொயிட் கார்த்திக் பந்தில் ரன் அவுட்டானார்.
ஆட்ட நாயகனாக கோல்கத்தா அணியின் கங்குலி தேர்வு செய்யப்பட்டார்.
|