இலங்கையில் நடைபெறும் மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 182 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
இந்திய வீராங்கனை ருமேலி தார் 92 ரன்களையும், ஆஷா ராவத் 69 ரன்களையும் எடுக்க இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 275 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் மகளிர் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு வெறும் 93 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இதன் மூலம் பாகிஸ்தான் இந்த தொடரில் தொடர்ந்து 3ஆவது போட்டியை தோற்றுள்ளது.
|