முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஷோயப் மீதான வழக்கு வாபஸ்-ஐ.பி.எல்.‌ல் விளையாடலாம்!
ஷோயப் அக்தர் மீது தொடர்ந்த மான நஷ்ட வழக்கை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திரும்பப் பெற்றுக் கொண்டது.

முன்னதாக ஷோயப் அக்தரின் 5 ஆண்டு காலத் தடையை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைத்ததன் மூலம் அக்தர் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாட அனுமதி கிடைத்துள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸீம் அஷ்ரஃப் தன்னிடம் தொகை ஒன்றை கேட்டதாக அக்தர் கூறியதை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்நிலையில் நேற்று பாகிஸ்தானின் முன்னணி அரசியல் தலைவர் ஒருவர் வீட்டில் நடந்த விருந்து ஒன்றில் ஷோயப் அக்தருக்கும், பாகிஸ்தான் வாரியத் தலைவர் நஸீம் அஷ்ரஃபிற்கும் சமரசம் ஏற்பட்டது. இதனையடுத்து வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டார் நஸீம் அஷ்ரஃப்.

பாகிஸ்தான் பிரதமரின் உள் விவகாரத் துறை முக்கிய ஆலோசகரான ரெஹ்மான் மாலிக் வீட்டில் இந்த விருந்து உப‌ச்சார சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்சந்திப்பினபோதஅக்தரதனசெய்கைகளுக்காநஸீமஅஷ்ரஃபிடமமன்னிப்பகேட்டார்.

5 ஆண்டுகால தடை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் ஐ.பி.எல். கிரிக்கெட் அணியான கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கு விளையாட ஷோயப் அக்தர் டெல்லி வந்து சேர்ந்துள்ளார்.

இருப்பினும் ஷோயப் அக்தர் மீதான 5 ஆண்டுகால தடை வழக்கு அடுத்த மாதம் 6ஆம் தேதி இறுதி விசாரணைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்
ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களூரு அ‌ணி‌க்கு 5வது தோ‌ல்‌வி!
பத்ம விபூஷன் விருது பெற்றார் சச்சின்!
ஐ.‌பி.எ‌ல். ‌கி‌ரி‌க்கெ‌ட்: டெல்லியை ‌வீ‌ழ்‌த்‌தியது மு‌ம்பை!
சென்னை அணி மீண்டும் தோல்வி: தன்‌வீ‌ர் 6 ‌வி‌க்கெ‌ட்!
அ‌க்த‌ர் ‌மீதான தடை ‌நிறு‌த்‌திவை‌ப்பு!
ராயல் சேலன்சர்ஸ் வெற்றி!