முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஹர்பஜன் விவகாரத்தை விசாரிக்கிறார் சுதிர் நானாவதி!
ஐ.பி.எல். இருபதுக்கு 20 போட்டியின் போது எதிரணி வீரர் ‌சி‌றிசாந்தை மும்பை இந்தியன் அணித் தலைவர் ஹர்பஜன் சிங் அறைந்த விவகாரத்தை விசாரணை செய்ய வழக்கறிஞர் சுதிர் நானாவதியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நியமித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து சுதிர் நானாவதி விசாரணை நடத்தி 15 நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நானாவதி அறிக்கையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சரத் பவார் பார்வைக்கு கொண்டுவந்த பிறகு ஒழுங்குக் குழுவின் நடவடிக்கைக்கு அனுப்பிவைக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே இன்று ஐ.பி.எல். ஆட்ட நடுவர் ஃபரூக் இஞ்சினியர் இந்த விவகாரத்தை விசாரணை செய்யவுள்ளார்.

சக வீரர் ஒருவரை தாக்குவது ஐ.சி.சி. நடத்தை விதிமுறைகளின் படி தண்டனைக்குரியதாகும். அதிகபட்சமாக ஆயுள் தடையோ, 5 டெஸ்ட் போட்டிகள் அல்லது 10 ஒரு நாள் போட்டிகளிலோ ஹர்பஜன் விளையாட தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.
மேலும்
ஐ.பி.எல். கிரிக்கெட்: கில்கிறிஸ்டி‌ன் அ‌திரடி சத‌த்தா‌ல் ஐதராபாத் வெற்றி!
ஐ.பி.எல். ‌கி‌ரி‌க்கெ‌ட்: டெ‌ல்‌லியை ‌வீ‌ழ்‌த்‌தியது ப‌ஞ்சாப்!
டெண்டுல்கர் ‌விளையாடுவாரா? இ‌ன்று ஐதராபாத்துடன் மோதல்!
ஐ.‌பி.எ‌ல் ‌கி‌ரி‌க்கெ‌ட்: ரா‌ஜ‌ஸ்தா‌‌ன் அ‌ணி வெ‌ற்‌றி!
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஹர்பஜன்சிங் த‌ற்கா‌லிக ‌நீ‌க்க‌ம்!
9 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூ‌ப்ப‌ர் கிங்ஸ் வெற்றி!