முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
ஐ.‌பி.எ‌ல். ‌கி‌ரி‌க்கெ‌ட்: மு‌ம்பை- ப‌ஞ்சா‌ப் அ‌ணி இ‌ன்று மோத‌ல்!
ஐ.‌பி‌.எ‌ல். போ‌ட்டி‌யி‌ன் 10வது ஆ‌ட்ட‌‌த்‌தி‌ல் இ‌ன்று இரவு நட‌க்கு‌ம் போ‌ட்டி‌யி‌ல் மு‌ம்பை அ‌ணியு‌ம், ப‌ஞ்சா‌ப் அ‌ணியு‌ம் மோது‌கிறது.

இந்திய பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) போட்டியின் 10-வது ஆட்டம் மொகா‌லி‌யி‌ல் இ‌ன்று இரவு நட‌க்‌கிறது. ச‌ச்‌சி‌ன் தலைமை‌யிலான மு‌ம்பை அ‌ணியு‌ம், யுவரா‌ஜ் ‌சி‌ங் தலைமை‌யிலான ப‌‌ஞ்சா‌ப் அ‌ணியு‌ம் கள‌ம் இற‌ங்கு‌கிறது.

இதுவரை ‌விளையா‌டிய இர‌ண்டு போ‌ட்டி‌க‌ளி‌ல் ப‌‌ஞ்சா‌‌ப் அ‌ணி தோ‌ல்‌வியை தழு‌வியு‌ள்ளது. அ‌ணி‌த் தலைவ‌ர் யுவரா‌ஜ் ‌சி‌ங் தலா 23, 57 ம‌ட்டுமே அடி‌த்து‌ள்ளா‌ர். அ‌ந்த அ‌ணி‌யி‌ல் இட‌ம் பெ‌ற்று‌ள்ள ச‌ங்க‌க்காரா, ஜெய‌வ‌ர்‌த்தனே ஆ‌கியோ‌ர் கு‌றி‌ப்‌பிடு‌ம்படி ‌விளையாட‌வி‌ல்லை. ப‌ந்து ‌வீ‌ச்சாள‌ர்களை பொறு‌த்தவரை ‌பிர‌ட் ‌லீ,, ப‌த்தா‌ன், ‌சி‌றிசா‌ந்‌த், ‌பியூ‌ஷ் சா‌‌‌வ்லா ஆ‌கியோ‌‌ர் ர‌ன்களை வா‌ரி‌க் கொடு‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

மு‌ம்பை அ‌ணி‌யிலு‌ம் இதே ‌நிலைதா‌ன் ‌நீ‌டி‌க்‌கிறது. தொட‌க்க ஆ‌ட்ட‌க்கார‌‌ர் சன‌த் ஜெய‌சூ‌ர்யா இதுவை ‌விளையாடிய இர‌ண்டு போ‌ட்டி‌க‌ளிலு‌ம் 49 ர‌ன்க‌‌ள் ம‌ட்டுமே எடு‌த்து‌ள்ளா‌ர். இ‌ன்று நட‌‌க்கு‌ம் போ‌ட்டி‌யி‌ல் ‌‌ச‌ச்‌சி‌ன் ‌விளையாடுவாரா எ‌ன்பது ச‌ந்தேகமே. இ‌ன்றைய போ‌ட்டி‌யி‌ல் இரு அ‌ணிகளு‌ம் வெ‌ற்‌றி பெ‌ற்ற வே‌ண்டு‌‌ம் எ‌ன்ற எ‌ண்ண‌த்துட‌ன் இரு‌ப்பதா‌ல் போ‌ட்டி ‌விறு‌விறு‌ப்பாக இரு‌க்கு‌ம்.

மு‌ம்பை அ‌ணி : ச‌ச்‌சி‌ன் டெ‌ண்டு‌ல்க‌ர், சவா‌ண், ‌சி‌த்தா‌ர்‌த் ‌சி‌ட்‌னி‌ஸ், ‌திமா‌ன், ‌தி‌ல்காரா பெ‌ர்ணா‌ன்டோ, ஹ‌ர்பஜ‌ன் ச‌ி‌ங், ஜெய‌சூ‌ர்யா, முசா‌வி‌ல் கோ‌ட்டோ, கு‌‌‌ல்க‌ர்‌‌னி, ந‌ய்யா‌ர், நெ‌க்ரா, ம‌‌ணீ‌‌ஷ் பா‌ண்டே, ராஜே‌ஷ் பவா‌ர், ஷா‌ன் பொ‌ல்லா‌க், ‌திவா‌ரி, ‌‌பி‌ரி‌ன்‌ஸ், ர‌‌ஹ‌்னே, ரோ‌ஞ்‌சி, ‌‌பினா‌ல் ஷா, ‌ஸ்வ‌ப்‌பி‌ல் ‌சி‌ங், யோகே‌ஷ், டே‌க்வாலே, உ‌த்த‌ப்பா, ‌வி‌க்ர‌‌ந்‌த் யெ‌லிகா‌ட்டி.

ப‌ஞ்சா‌ப் அ‌ணி : யுவரா‌ஜ் ‌சி‌‌ங், கர‌ண் கோய‌ல், ஜே‌ம்‌ஸ் ஹோ‌ப்‌ஸ், ச‌ங்க‌க்காரா, ‌சிமோ‌ன் கடி‌ச், ப‌ங்க‌ஜ் த‌ர்ம‌ணி, இ‌ர்பா‌ன் ப‌த்தா‌ன், ‌பிர‌ட் ‌லீ, ‌பியூ‌ஷ் சா‌வ்லா, ‌வி‌ல்க‌ி‌ன் மோடா, ‌சி‌‌றிசா‌ந்‌த், அ‌ஜிதே‌ஷ் அ‌ர்க‌ல், ‌ரி‌‌ஷி தவா‌ண், ஜெயவ‌ர்‌த்தனே, உத‌ய் கெ‌ள‌ல், மா‌‌ர்‌ஷ், ‌மி‌ல்‌ஸ், ரமே‌ஷ் பவா‌ர், ‌நி‌தி‌ன் சை‌னி, ச‌ர்வா‌ன், ‌வி‌க்ர‌ம் ‌சி‌ங், ‌சி‌‌றிவ‌த்சவா, ச‌ன்‌னி சோஹை‌ல்.
மேலும்
ஐ.பி.எல்.: ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!
ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி!
சென்னை சூப்பர்கிங்ஸ்-மும்பை இந்தியன்ஸ் இ‌ன்று மோதல்!
சச்சினுக்கு வார்ன் பிறந்த நாள் வாழ்த்து!
சேவாக் அ‌திரடி‌யி‌ல் ‌வீ‌ழ்‌ந்தது டெ‌க்கா‌ன் அ‌ணி!
கிரிக்கெட் அகாடமி துவங்கினார் நிட்டினி!