முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
வீரர்களை வாட்டும் கிரிக்கெட் பயணத் திட்டம்!
வரும் மாதங்களில் இந்திய அணி கடுமையான கிரிக்கெட் பயணங்களை மேற்கொள்ளவிருக்கிறது.

சுருக்கமாக கூறவேண்டுமென்றால், இடைவெளியில்லாமல் கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து இந்திய அணி விளையாடவுள்ளது. வங்கதேசம் சென்று அங்கு முத்தரப்பு ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. மேலும் பாகிஸ்தான், இலங்கை அணிகளுடன் விளையாட அந்நாடுகளுக்கு செல்கிறது இந்திய அணி.

அதன் பிறகு ஆஸ்ட்ரேலியா, இங்கிலாந்து அணிகளுடன் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகள்.அதாவது வங்கதேச முத்தரப்பு தொடரையும் சேர்த்து எண்ணற்ற ஒரு நாள் போட்டிகளையும் 15 டெஸ்ட் போட்டிகளையும் இந்தியா விளையாடுகிறது.

இடையே இந்திய பிரிமியர் லீக் இருபதுக்கு 20 போட்டிகள் தொடங்குகின்றன. ஏப்ரல் 18ல் துவங்கும் இப்போட்டிகள் மே மாதம் 31ஆம் தேதி முடிவடைகிறது. இதில் சுமார் 59 போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கு பிறகுதான் வங்கதேச பயணம்.

இது முடிந்தவுடன் ஜூன் 24ஆம் தேதி பாகிஸ்தானில் ஆசியக் கோப்பை போட்டிகளில் பங்கேர்கிறது. உடனேயே இலங்கையில் 46 நாட்கள் பயணம் மேற்கொள்கிறது. இங்கு 3 டெஸ்ட் போட்டிகளையும், 5 ஒரு நாள் போட்டிகளையும் விளையாடுகிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.

உடனேயே பாகிஸ்தானில் நடைபெறும் ஐ.சி.சி. சாம்பியன் கோப்பை போட்டிகளுக்காக இந்திய அணி பாகிஸ்தான் பயணம் மேற்கொள்கிறது. இது 20 நாட்கள் நடைபெறும். உடனே இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்ட்ரேலிய அணி இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறது. 4 டெஸ்ட்கள், 7 ஒரு நாள் போட்டிகள்.

உடனேயே இங்கிலாந்து அணி இங்கு வருகிறது இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் மீண்டும் 7 ஒரு நாள் சர்வதேச போட்டிகளையும் விளையாடுகிறது. இது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை.

சரி உடனே ஒரு மாதம் ஓய்வு என்று நினைத்து விடவேண்டாம். இதோ வருகிறது ஜனவரி 4ஆம் தேதி முதல் பாகிஸ்தான் சென்று 3 டெஸ்ட் 5 ஒரு நாள் போட்டிகள். இது பிப்.20ஆம் தேதி நிறைவடைகிறது.

ஒரு வழியாக முடிந்தது என்று நினைக்கவேண்டாம். பிப்.26 ஆம் தேதி உடனேயே நியூஸிலாந்து பயணம் மேற்கொள்கிறது இந்திய அணி. ஏப்ரல் 15ஆம் தேதி வரை இந்த தொடர் நீடிக்கிறது. இதில் 3 டெஸ்ட்கள் 5 ஒரு நாள் போட்டிகள்.

ஐ.பி.எல். போட்டிகள் உட்பட நடப்பு தென் ஆப்பிரிக்க தொடரில் துவங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி வரை இடையறா கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா பங்கேற்கிறது.

மூத்த வீரர்கள் இருக்கட்டும்; அணியின் இளம் வீரர்களே இது போன்ற நெருக்கமான, நெருக்கடியான போட்டிகளை சமாளிப்பார்களா என்பது கேள்வி.

இந்திய அணி வீரர்கள், ஆஸ்ட்ரேலிய முன்னாள் வீரர் டிம் மே கூறுவது போல், வீரர்கள் சங்கத்தை உடனடியாகத் துவங்கி, ஆண்டிற்கு இவ்வளவு ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளை மட்டுமே விளையாடுவோம் என்ற கோரிக்கையை வலியுறுத்தவில்லையெனில், விரைவில் வீரர்கள் சோர்வடைந்து ஒரு கட்டத்தில் திறமையான வீரர்களுக்கு பஞ்சம் ஏற்பட்டு விடும் நிலை உருவாகும்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்று பெயர் வைத்துக் கொண்டு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் இது போன்று வீரர்களின் மீது பணிச் சுமையை சுமத்தலாமா? என்பது ரசிகர்களின் மனதில் எழுந்துள்ள கேள்வியாகும்.
மேலும்
அ‌‌‌ம்லா 157 ர‌ன்‌னி‌ல் அவு‌ட்: தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா 456/6
முத‌ல் டெ‌ஸ்‌ட்: மே‌ற்‌கி‌ந்‌திய ‌தீவை ‌‌வீ‌ழ்‌த்‌‌தியது இ‌ல‌ங்கை!
முதல் நாள்: தென் ஆப்பிரிக்கா 304/4
தேனீர் இடைவேளை: தெ.ஆ. 206/2
சு‌மி‌த் அவு‌ட்: தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா 176/1
மெ‌க்க‌ன்‌சி, சு‌மி‌த் அரை சத‌ம்: தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா 109/0