முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
முதல் நாள்: தென் ஆப்பிரிக்கா 304/4
சென்னையில் நடைபெறும் முதல் டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி சிறப்பாக விளையாடி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 304 ரன்களை எடுத்துள்ளது.

ஹாஷிம் அம்லா 85 ரன்களுடனும், டிவிலியர்ஸ் 10 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

இன்று காலை பூவா தலையா வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. பந்து வீச்சாளர்களுக்கு சிறிதளவும் உதவி புரியாத ஆட்டக்களத்தில் ஸ்மித்தும், மெக்கன்சியும் நிதானமாக துவங்கி பிறகு ரன் எண்ணிக்கையை உயர்த்துவதில் வேகம் காட்டினர்.

உணவு இடைவேளை வரை இந்தியாவிற்கு எந்த விதத்திலும் வாய்ப்பை அளிக்காமல் இருவரும் 109 ரன்களை சேர்த்தனர். உணவு இடைவேளை முடிந்து 73 ரன்கள் எடுத்திருந்த ஸ்மித் கவனத்தை சிதறவிட்டதால் கும்ளே பந்தை தவறாக கணித்து ஆட்டமிழந்தார்.

மெக்கன்சி ஸ்மித்தைவிடவும் வேகப்பந்து, சுழற்பந்து இரண்டையும் அபாரமாக விளையாடினார். கடைசியில் 94 ரன்களை எடுத்து இந்தியாவில் விளையாடும் முதல் டெஸ்டிலேயே சதம் எடுக்கும் நிலைக்கு வந்போது, ஹர்பஜனின் தூஸ்ராவை தவறாக கணித்து ஆட முற்பட்டார். பந்து மட்டையின் விளிம்பில் பட்டு திராவிடிடம் கேட்சாக அமைந்தது.

அதன் பிறகு கா‌லீஸ் களமிறங்கினார். இந்திய அணியினர் சுறுசுறுப்படைந்தனர். காலீஸை சுற்றி நெருக்கமாக வியூகம் அமைத்தனர். அவரும் போராடி 57 நிமிடங்கள் நின்று வெறும் 13 ரன்களை மட்டுமே எடுத்து ஹர்பஜன் பந்திற்கு ஆட்டமிழந்து, நடுவர் அவுட் கொடுக்காமலேயே பெவிலியன் நோக்கி நடையை கட்டினார்.

ஹாஷிம் அம்லா, இவர் ஆன் திசையில் பலமான வீரர். ஆன் திசையில் வீசிய பந்துகளையும் ஆஃப் திசையில் அளவு குறைவாக வீசிய பந்தையும் பவுண்டரிகளுக்கு விளாசினார். மற்றபடி கும்ளே, ஹர்பஜன் ஆகிய இருவரையும் ஓரளவிற்கு திறமையாகவே சமாளித்தார். இவர் 10 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்து ஆடி வருகிறார்.

ஆட்டமிழக்கச் செய்வதில் மற்றொரு கடினமான வீரரான ஆஷ்வெல் பிரின்ஸ் கும்ளேயை திறம்பட ஸ்வீப் செய்து விளையாடி வந்தார். இதனால் கும்ளே விக்கெட்டை சுற்றி வந்து வீச முடிவு செய்தார். 23 ரன்களுடன் ஆடி வந்த பிரின்ஸ், கும்ளேயின் பந்து ஒன்று சற்றே நின்று வந்ததால் ஷாட்டை கட்டுப்படுத்த முடியாமல் ஆட நேர்ந்தது இதனால் கும்ளேயிடம் சற்று தள்ளி வந்தது பந்து. இதனை பாய்ந்து சென்று அபாரமாக பிடித்தார் கும்ளே. இன்றைய ஆட்டத்தின் சிறப்பான கேட்சாக இது அமைந்தது.

ஆட்ட முடிவில் ஏ.பி. டிவிலியர்ஸ் தடுமாறியபடி இன்றைய தினத்தை கடத்தி விட்டார்.

ஆட்டக்களம் போகபோக சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக மாறுவதற்கான அடையாளங்களை இன்றே காட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று வெறும் 4 விக்கெட்டுகளை மட்டுமே பறி கொடு‌த்து 304 ரன்களை தென் ஆப்பிரிக்கா எடுத்துள்ளதால் முதல் நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா பலமாக உள்ளதாகவே கருதலாம்.

இந்திய அணியைப் பொறுத்தவரை, நாளை அம்லாவை முதலில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணியை 350- 375ற்குள் சுருட்டினால் நல்லது. இல்லையெனில் 400- 450 ரன்களை தென் ஆப்பிரிக்கா குவித்து விட்டால், இந்திய பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடி ஏற்படும்.
மேலும்
தேனீர் இடைவேளை: தெ.ஆ. 206/2
சு‌மி‌த் அவு‌ட்: தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா 176/1
மெ‌க்க‌ன்‌சி, சு‌மி‌த் அரை சத‌ம்: தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா 109/0
மே‌ற்‌கி‌ந்‌திய அ‌ணி‌க்கு 438 ர‌ன் வெ‌ற்‌றி இல‌க்கு!
சென்னை டெ‌ஸ்‌ட் : தெ.ஆ. 85/0
டெ‌ஸ்‌ட் தொடரை வெ‌ன்றது இ‌ங்‌கிலா‌ந்து!