முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > செய்திகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
தேனீர் இடைவேளை: தெ.ஆ. 206/2
சென்னையில் இந்திய தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெறும் முதல் டெஸ்ட்டி‌ன் முதல் நாள் ஆட்ட தேனீர் இடைவேளையின் போது தென் ஆப்பிரிக்க ‌வீ‌ர‌‌ர்க‌ள் ஸ்மித், மெக்கன்சி ஆகியோர் விக்கெட்டை இழந்து 206 ரன்கள் எடுத்துள்ளது.

ஹாஷிம் அம்லா 31 ரன்களுடனும் காலிஸ் 3 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

உணவு இடைவேளைக்கு பிறகும் ஸ்மித், மெக்கன்சி அபாரமாகவே விளையாடினர். வேகப்பந்து வீச்சாளர்களுக்கு இந்த களத்தில் எதுவும் இல்லை. இதனால் ஸ்ரீசாந்தின் பந்து வீச்சில் ஒரு ஓவரில் ஸ்மித் 4 பவுண்டரிகளை விளாசினார். 13 பவுண்டரிகளுடன் 73 ரன்கள் எடுத்து நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஸ்மித், கும்ளேயின் பந்தை லெக் திசையில் டிர‌வ் ஆட முயன்றபோது அது ஷாட் மிட் விக்கெட் திசையில் லக்ஷ்மணிடம் கேட்சாக அமைந்தது.

ஆனால் மெக்கன்சி சற்று நிதானமாக ஆடத் துவங்கியிருந்தார். 132 ரன்களை முதல் விக்கெட்டுக்குச் சேர்த்த தென் ஆப்பிரிக்க அணி 2ஆவது விக்கெட்டுக்காக மெக்கன்சியும் அம்லாவும் இணைந்து மேலும் 64 ரன்களைச் சேர்த்த போது தேனீர் இடைவேளைக்கு சற்று முன் 2ஆவது விக்கெட்டை இழந்தது.

18 பவுண்டரிகளுடன் அபாரமாக ஆடிவந்த மெக்கன்சி 94 ரன்கள் எடுத்திருந்தபோது ஹர்பஜன் வீசிய அபாரமான தூஸ்ராவிற்கு ஸ்லிப் திசையில் திராவிடிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
மேலும்
சு‌மி‌த் அவு‌ட்: தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா 176/1
மெ‌க்க‌ன்‌சி, சு‌மி‌த் அரை சத‌ம்: தெ‌ன் ஆ‌ப்‌பி‌ரி‌க்கா 109/0
மே‌ற்‌கி‌ந்‌திய அ‌ணி‌க்கு 438 ர‌ன் வெ‌ற்‌றி இல‌க்கு!
சென்னை டெ‌ஸ்‌ட் : தெ.ஆ. 85/0
டெ‌ஸ்‌ட் தொடரை வெ‌ன்றது இ‌ங்‌கிலா‌ந்து!
சென்னை: தெ.ஆ. முதலில் பேட்டிங்!