முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > ஐ‌பிஎ‌ல் > அடுத்த போட்டியில் சேவாக் விளையாடுகிறார்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அடுத்த போட்டியில் சேவாக் விளையாடுகிறார்
புதன் கிழமை நடைபெறும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி டேர் டெவில்ஸ் அணித் தலைவர் விரேந்திர சேவாக் விளையாடுவார் என்று அந்த அணியின் தற்காலிக தலைவர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த சில போட்டிகளில் பங்கேற்காத சேவாக், காயத்திலிருந்து முழுதும் குணமடைந்து மீண்டும் விளையாடவிருப்பதாக கம்பீர் செதியாளர்களிடம் தெரிவித்தார்.

சேவாகிற்கு பதிலாக விளையாடிய ஆஸ்ட்ரேலிய இளம் புயல் டேவிட் வார்னர் தனக்கு அளித்த வாய்ப்பை இருகரங்களாலும் பற்றி தக்கவைத்துள்ளார்.

விரேந்திர சேவாக் இல்லாமல் வெற்றி பெற்றுள்ளோம் எனும்போது அவர் விளையாடுகிறார் என்ற செய்தி எதிரணியினருக்கு மேலும் அச்சுறுத்தலைக் கொடுக்கும் என்று தான் கருதுவதாக கம்பீர் தெரிவித்தார்.

மேலும் சிறப்பான பந்து வீச்சாளர் கிளென் மெக்ரா விளையாடாமலேயே அந்த அணி போட்டிகளை வென்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும்
விறுவிறுப்பான போட்டியில் டெக்கான் -ராஜஸ்தான் மோதல்
வெளியேறியது கொல்கத்தா : டெல்லி அணிக்கு 7-வது வெற்றி
பெங்களூரை வென்றது மும்பை அணி
பத்ரிநாத் அபாரம் சென்னை வெற்றி
ராஜஸ்தான் ராயல்ஸ் 140/7 (20 ஓவர்)
ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பேட்டிங்