அவுட் கொடுக்கப்படாமல் தப்பித்த இயன் பெல்! தொழில்நுட்பத்தின் அலங்கோலம்!

திங்கள், 18 ஜூன் 2012 (14:51 IST)

FILE
கள நடுவர் தீர்ப்பிற்கு வீரர்கள் மேல் முறையீடு செய்யும் முறை சர்வதேச டில் அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து அது குறித்த சர்ச்சை அதிகரித்து வருகிறது. அன்று மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக சதம் கண்ட லைக் காப்பாற்றியது மேல் முறையீடு தீர்ப்பே.

ஏற்கனவே 2011 உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அவரது விக்கெட்டை டீ.ஆர்.எஸ். காப்பாற்றிக்கொடுக்க ஜெயிக்கவேண்டிய இந்திய ஆட்டம் டிரா ஆனது நினைவிருக்கலாம்.

பிறகு அதே தொடரில் அயர்லாந்துக்கு எதிராக கடுமையான தீர்ப்புகள் இதே மேல்முறையீட்டுத் தொழில்நுட்பத்தினால் ஏற்பட, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலிய அணிகள் தங்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வருவதால் மேல்முறையீட்டு தொழில்நுட்பத்திற்கு கண்மூடித் தனமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அன்று மேற்கிந்திய அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் 23 ரன்களில் இருந்த பெல் மட்டையில் பட்டு பந்து கேட்ச் ஆனது. ஆனால் நடுவர் தீர்ப்பை மேல் முறையீடு செய்தும், பந்து மட்டையில் பட்டுச் சென்றது நன்றாகத் தெரிந்தும் சந்தேகத்தின் பலனை பெல்லுக்கு வழங்கினர் நடுவர்கள், அன்று இங்கிலாந்து சரியாக 114 ரன்களில் வெற்றி பெற்றது. பெல் எடுத்த ஸ்கோர் 126!

அவர் பந்தைத் தொட்டு விட்டு ஆட்டமிழந்து எதிரணியினரை எதிர்கொள்ள மீண்டும் ஆடும் அருவறுப்புக்குகந்த செயலைச் செய்து விட்டு ஆட்டம் முடிந்த பிறகு "ஆமாம்" என்று வெட்கமில்லாமல் கூறிவிட்டு தனது சதத்தை எவ்வாறு திட்டமிட்டு அடித்தேன் என்று அவர் கொடுத்த விளக்கம் படு மோசம்.

சிறிது கூட சீரான தன்மை இல்லாத நடுவர் தீர்ப்பு மேல் முறையீட்டை இந்தியா எதிர்த்தால் இந்தியாவை மொத்த ஐ.சி.சி. உறுப்பு நாடுகளும் போட்டு கும்மி எடுத்து விடுகின்றன.

நடுவரின் தரத்தைப் பார்த்து டீ.ஆர்.எஸ். தீர்ப்பு வழங்கப்படுகிறது. சைமன் டாஃபெல் அவுட் கொடுத்து விட்டால் அதனை மேல் முறையீடு செய்யும்போது அந்த நாட்டாமையின் தீர்ப்பு மாற்றப்படுவதில்லை.

வேறு ஏப்பை சோப்பை நடுவர் அவுட் கொடுத்தால் அல்லது அவுட் கொடுக்காமல் இருந்தால் 10 முறை ரீபிளே பார்த்து 'நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு' என்கின்றனர் 3வது நடுவர்கள்.

அதனால்தான் தோனி மிக அழகாகக் கூறினார். ஒன்று தொழில் நுட்பத்தை நம்பு அல்லது மனிதனை நம்பு இரண்டையும் கலப்பது மிக மோசம் என்றார்.

ஏன் இங்கிலாந்து, ஆஸ்ட்ரேலியா, தென் ஆப்பிரிக்கா இதனை ஆதரிக்கிறது என்றால் அவர்களது சொத்தை ஸ்பின்னர்களும் பெரிய துணைக் கண்ட வீரர்கள் விக்கெட்டை எடுத்து விடக்கூடிய வாய்ப்பை இந்த டீ.ஆர்.எஸ். வழங்கி விடுகிறது.

டீ.ஆர்.எஸ். மூலம்தான் அஜந்தா மெண்டிஸ் புகழ் பெற்றார். விக்கெட்டுகளைக் கொட்டி குவித்தார். இப்போது அவர் இலங்கை அணியிலேயே இல்லை.

எனவே உண்மையான பந்து வீச்சுத் திறனை வளர்க்க நடுவர் தீர்ப்பு மேல்முறையீடு உதவாது.

மிகவும் வெளிப்படையாக நாட் அவுட் என்று தெரிவதையும், வெளிப்படையாக அவுட் என்று தெரிவதையுமே தொழில் நுட்ப உதவியுடன் நியாயமாக தீர்ப்பளிக்காத பட்சத்தில் எதற்கு அந்த தொழில் நுட்பம் என்று இந்தியா கேட்பதில் நியாயம் இல்லாமல் இல்லை!

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine

கிரிக்கெட்

இந்தியா - இங்கிலாந்து இன்று முதல் டெஸ்ட்!

வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவ் ஹார்மிசன் அறுவை சிகிச்சையின் காரணமாக இத்தொடரில் ஆடப் ...

சச்சின் அபார சதம்! மீண்டது இந்தியா!

இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்று வரும் பயிற்சி ஆட்டத்தில், 14 ...

700 விக்கெட்டுகள்! முரளிதரன் சாதனை!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது பந்து வீச்சாளர் என்ற பெருமையை ...

இங்கிலாந்து சென்றது இந்திய அணி

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டு சென்றது

Cricket Scorecard

Widgets Magazine

தலையங்கங்கள்

வாரணாசி தொகுதியில் மோடிக்கு நெருக்கடி

வாரணாசி தொகுதியில் போட்டியிடும் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு 5 முனை போட்டி இருப்பதால் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

ஒரு படம் நாலு நாள் ஓடினாலே வெற்றிவிழா கொண்டாடுகிறார்கள். நிமிர்ந்து நில் ஒரு வாரத்தை கடந்து ...

சமீபத்திய

வா‌ஸ்து: கிணறு, ஆழ்துளை கிணறு அமைக்கும் முறை

வா‌ஸ்து ‌நிபுண‌ர் - ஆ‌ண்டா‌ள் ‌பி.சொ‌க்க‌லி‌ங்க‌ம்!

ஒரு இடத்திற்கு மதிற்சுவர் அமைக்கும் முறை...

வா‌ஸ்து ‌நிபுண‌ர் - ஆ‌ண்டா‌‌ள் ‌பி. சொ‌க்க‌லி‌ங்க‌ம்

படிக்க வேண்டும்

நடுவானில் உடைந்து விழுந்த இறக்கை - பதற்றத்தில் பயணிகள்

அமெரிக்காவின் ஆர்லண்டோவிலிருந்து அட்லாண்டாவிற்கு 179 பயணிகளோடு சென்றுக்கொண்டிருந்த விமானத்தின் ...

நயன்தாராவுடன் நடித்தது நல்ல அனுபவம் - சக்சஸ் மீட்டில் ஜெயம் ரவி

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பதை சம்பந்தப்பட்டவர்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக ...

காக்கா முட்டையை காப்பாற்றிய வெற்றிமாறன்

வெற்றிமாறனும், தனுஷும் கூட்டாக தயாரித்திருக்கும் படம் காக்கா முட்டை. மணிகண்டன் இயக்கம். படம் ...

ஜடேஜா 4 விக்கெட் ஆப்கான் 101/7 (28)

ஆசியக்கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டியில் இந்தியா ஆப்கானை எதிர்த்து விளையாடி வருகிறது. முதலில் ...

Widgets Magazine
Widgets Magazine