முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > கட்டுரைகள் > பளபளக்கும் பணமழை ஐ.பி.எல். நாளை முதல் பொழிகிறது
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பளபளக்கும் பணமழை ஐ.பி.எல். நாளை முதல் பொழிகிறது
webdunia photoFILE
பல்வேறு விமர்சனங்களுக்கும், வரவேற்புகளுக்கும் இடையே கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட, 'கிரிக்கெட் வர்த்தக குரு' என்று அழைக்கப்பட்ட லலித் மோடியின் உருவாக்கமுமான ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அத்தியாயம் நாளை தென் ஆப்பிரிக்காவில் தொடங்குகிறது.

நாளை இந்திய நேரம் மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியையும், இரவு 8 மணிக்கு நடைபெறும் இரண்டாவது போட்டியில் கடந்த முறை சாம்பியனான ஷேன் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கெவின் பீட்டர்சன் வருகையால் புதிய உத்வேகம் பெற்றுள்ள பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது.

கடந்த முறை இளம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வசூல் சாதனை படைத்த ஐ.பி.எல். கிரிக்கெட், இந்த முறை பாதுகாப்பு காரணங்களுக்காக தென் ஆப்பிரிக்காவிற்கு மாற்றப்பட்டுள்ளது, கோடை விடுமுறை மாலை வேளைகளை ஜாலியாக கிரிக்கெட் மைதானங்களில் ஐ.பி.எல். போட்டிகளை கண்டு களிப்பதன் மூலம் செலவிடவிருந்த இந்திய ரசிகர்களுக்கு போட்டிகள் இங்கு நடைபெறாதது ஒரு இழப்புதான்.

இருப்பினும் தொலைக்காட்சியில் இந்த போட்டிகளைக் காண இந்த முறையும் ரசிகர்கள் ஆவலாய் இருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த முறை கூடுதலாக சேர்க்கப்பட்ட கெவின் பீட்டர்சன், பிளின்டாஃப், காலிங்வுட், மற்றும் பிற இந்திய, ஆஸ்ட்ரேலிய இளம் வீரர்கள் கூடுதல் விருந்தளிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

webdunia photoFILE
அணிகளைப் பொறுத்த வரை கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிக ரன்களை குவித்து தொடர் நாயகன் விருது பெற்ற ஷேன் வாட்சனும், அதிக விக்கெட்டுகளைக் வீழ்த்திய பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் தன்வீரும் இல்லாதது இழப்புதான். இருப்பினும் ஷேன் வார்ன் என்ற ஒரு மிகப்பெரிய கிரிக்கெட் மூளை, இருக்கும் வீரர்களை வைத்துக் கொண்டு தனது சாம்பியன் தகுதியை நிலை நாட்டப் பாடுபடும்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தென் ஆப்பிரிக்க அணித் தலைவர் கிரேம் ஸ்மித் இருப்பது ஷேன் வார்னுக்கு ஒரு மிகப்பெரிய பக்க பலம். கடந்த முறை துவக்கத்தில் களமிறங்கி 'யார் இவர்' என்று மூக்கில் விரல் வைக்க வைத்த ஸ்வப்னில் அஸ்னோட்கர், யூசுஃப் பத்தான், ரவிந்திர ஜடேஜா, ஜஸ்டின் லாங்கர், டிமிட்ரி மஸ்கரெந்காஸ் போன்ற வீரர்கள் பேட்டிங்கிலும், பந்து வீச்சில் ஷேன் வார்ன், சித்தார்த் திரிவேதி, ஷான் டெய்ட், முனாஃப் படேல் ஆகியோர் உள்ளனர். எனவே இந்த அணியை சாதரணமாக எடை போட முடியாது.

இந்த அணியை எதிர்த்துப் போட்டியிடும் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி இந்த முறை கடந்த முறை செய்த தவறுகளை திருத்திக் கொண்டு வெற்றிக்கு கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கலாம். இந்த அணிக்கு புதிய கேப்டன் கெவின் பீட்டர்சன்.
1 | 2 | 3  >>  
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
மேலும்
தோனியின் தலைமையில் மற்றுமொரு மகுடம்!
இந்திய அணியின் அபார வெற்றியின் பின்ன‌ணி
பி.சி.சி.ஐ-யின் தொடரும் அற்பத்தனம்!
சச்சினுக்கு எதிராக தொடர்ந்த மோசமான தீர்ப்புகள்
16 ஆண்டு கால ஆஸ்ட்ரேலிய கோட்டை சரிந்தது!
முடிவடைகிறார் மேத்யூ ஹெய்டன்?