1990 ஆம் ஆண்டுகளில் உதித்த சச்சின், லாரா என்ற இந்த மிகப்பெரிய கிரிக்கெட் ஆளுமைகளில் லாராவின் சாதனை மிகுந்த சகாப்தம் முடிவுக்கு வந்தது, சச்சினின் சாதனை சகாப்தம் இன்னமும் தொடர்கிறது. இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கர் இன்னமும் 77 ரன்கள் எடுத்தால் லாராவின் 11,953 ரன்கள் என்ற உலக சாதனையை முறியடித்து உலகிலேயே அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற புதிய உச்சத்தை எட்டவுள்ளார்.சமகால அல்லது சம திறன் படைத்த வீரர்களை ஒப்பிட்டுப் பார்ப்பது நமக்குள் ஊறிய ஒரு விஷயம். ஒரு காலத்தில் கபில்தேவ், இம்ரான், கபில்தேவ்-இயன் போத்தம், கவாஸ்கர்-பேரி ரிச்சர்ட்ஸ் என்று நாம் பல வேளைகளில் ஒப்பிட்டுப் பார்த்து நண்பர்களிடம் தகராறு கூட ஏற்பட்டிருக்கும். சச்சினின் இந்த உலக சாதனையை முன்னிட்டு, முன்பு ஓங்கியிருந்த, ஆனால் தற்போது ஓய்ந்து போன சச்சின் - லார ஒப்பிட்டை நாம் புள்ளி விவரங்கள் அடிப்படையில் பார்ப்போம். ஆஸ்ட்ரேலியா தற்போது இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளை விளையாடவுள்ளதால். ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக சச்சின், லாரா ஆகியோரது ரன் விவரங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்று தோன்றுகிறது.131 டெஸ்ட்களை விளையாடியுள்ள பிரையன் லாரா 11,953 ரன்களை 52.88 என்ற சராசரியுடன் பெற்றுள்ளார். 34 சதங்கள் 48 அரை சதங்கள்; டெஸ்ட் வாழ்வில் 88 சிக்சர்களை லாரா அடித்துள்ளார் 161 கேட்ச்களை பிடித்துள்ளார்.சச்சின் 150 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளார். ஏற்கனவே லாராவைக் காட்டிலும் 19 டெஸ்ட் போட்டிகளை கூடுதலாக விளையாடிவிட்டார். 11,877 ரன்களை 54.23 என்ற சராசரியுடன் பெற்றுள்ளார். 39 சதங்கள் 49 அரை சதங்கள். கேட்ச்கள் 98; சிக்சர்கள் 47.ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக இருவருமே 1991- 92 ஆம் ஆண்டு தொடரில்தான் முதல் போட்டியை விளையாடுகின்றனர். 1992 முதல் 2005 ஆம் ஆண்டு வரையிலான தனது கிரிக்கெட் சகாப்தத்தில் லாரா ஆஸ்ட்ரேலியாவுடன் 31 டெஸ்ட் போட்டிகளை விளையாடியுள்ளார். இதில் 2856 ரன்களை 51.00 என்ற சராசரி விகிதத்தில் எடுத்துள்ளார். 9 சதங்கள் அடித்துள்ளார்.ஆஸ்ட்ரேலிய மைதானங்களில் 19 டெஸ்ட்களை ஆடியுள்ள லாரா 1469 ரன்களை 41.97 என்ற சராசரியில் எடுத்துள்ளார். ஒரு இன்னிங்சில் எடுத்த அதிகபட்ச சொந்த ரன்கள் 277.மேற்கிந்திய தீவுகளில் 12 டெஸ்ட் போட்டிகளை ஆடியுள்ள லாரா 1387 ரன்களை 66.04 என்ற சராசரி விகிதத்தில் பெற்றுள்ளார். அதிகபட்ச சொந்த ரன் எண்ணிக்கை 213. அவர் அடித்த 9 சதங்களில் 4 ஆஸ்ட்ரேலிய மண்ணில், 5 மேற்கிந்திய தீவுகளில். |
| தேடல் தொடர்பான தகவல்கள் |
|