எம்.ஜி.ஆர். நடித்த பல்லாண்டு வாழ்க திரைப்படத்தில், அவர் திருத்த முயலும் குற்றவாளிகள், எம்.ஜி.ஆரின் கண்களில் இந்த 'எஃகினாலான மின்னொளியை' கண்டபிறகு மனம் மாறுவார்கள். ஆனால் நம் பாண்டிங் கிரேக் சாப்பல் கண்ட மின்னொளி கைகொடுக்காமல் போனால் அதே கண்களில் சிட்னி டெஸ்ட் போட்டியில் செய்த அதே மோசடியின் குறியீடாக 'Stealy glint'-ஐ பார்ப்பாரா? சரி அதை விடுவோம்.அந்த 4 பேருக்கு...அணிகளை பொறுத்தவரை நாம் ஆஸ்ட்ரேலிய அணியை பற்றி ஏற்கனவே பலமும் பலவீனமும் என்று அலசியுள்ளோம். இந்திய அணியைப் பொறுத்தவரை, நாமெல்லாம் பேசிப் பேசி வாய் ஓய்ந்து போன "அந்த 4 பேர்" (சச்சின், திராவிட், கங்கூலி, லக்ஷ்மண்) எப்படி ஆடுவார்கள் என்பதை பொறுத்து தொடரின் போக்கு நிர்ணயிக்கப்படும். இந்த 4 வீரர்களில் இன்னிங்ஸிற்கு இரண்டு பேர் நன்றாக திறமையை வெளிப்படுத்தினால் போதுமானது. குறிப்பாக சேவாக் நன்றாக விளையாடி ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சாளர்களின் கைகளை ஒடித்த பிறகு, இவர்கள் களமிறங்கி அவர்களின் கைகளை ஓங்க விடாமல் பார்த்துக் கொள்வது முதல் குறிக்கோளாக இருக்கவேண்டும்.தோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னமும் அதிக பங்களிப்பு செய்ய வேண்டும் என்று அணியில் எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். இவர் மூத்த வீரர்களின் கடமையை நினைவூட்டும் அறிக்கைகளை தவிர்த்துக் கொண்டு தனது மங்கி வரும் பேட்டிங் திறன்களை மேம்படுத்த பாடுபட்டால் நல்லது. இவர் களமிறங்கும் இடத்தில் முன்பு இந்திய கண்கள் கபில் தேவை கண்டு மகிழ்ந்துள்ளது என்று யாராவது அவருக்கு நினைவூட்டினால் நல்லது. திராவிட் போல விளையாட நம்மிடையே கய்ஃப், கோளி, ரோஹித் என்று ஏராளமான இளம் வீரர்கள் உள்ளனர். இவர் இவருக்கேயுரிய அதிரடி ஆட்டத்தை ஆடுவதுதான் சிறந்தது. இதனை பயிற்சியாளர்தான் கூறவேண்டும். ஆமாம், இந்திய அணியின் பயிற்சியாளர் யார்? சச்சினா? தெரிந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.பந்து வீச்சை பொறுத்தவரை இந்திய அணி முரளி கார்த்திக்கை அணிக்குள் அழைத்து 3 சுழற்பந்து வீச்சாளர் ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர் என்று களமிறங்குவதுதான் சிறந்தது.எப்படியும் ஆட்டக்களம் பேட்டிங்கிற்கு சாதகமாக முதல் 2 அல்லது இரண்டரை நாட்கள் இருக்கும். இந்த நிலையில் பூவா தலையாதான் டெஸ்ட் முடிவை தீர்மானிக்கும் என்று நம்பலாம். இதனை நாம் இலங்கை தொடரிலும் பார்த்தோம். எனவே 3 சுழற்பந்து வீச்சாளர்களை வைத்துக் கொள்வதுதான் சிறந்தது.அதேபோல் ஆஸ்ட்ரேலிய அணியின் வேகப்பந்து சோடை போகக்கூடியதல்ல. இந்தியாவில் அனுபவம் இல்லாவிட்டாலும் அவர்கள் நிறைய சவாலான கிரிக்கெட் போட்டிகளை விளையாடியவர்களே என்பதில் இந்தியா கவனமாக இருக்கவேண்டும்.ஆஸ்ட்ரேலிய அணியின் உத்தி, கடந்த 2004- 05 தொடர் போலவேதான் இருக்கும். ஏனெனில் அதே முறையைத்தான் அவர்கள் நாம் ஆஸ்ட்ரேலியா சென்ற போது மெல்போர்ன் டெஸ்டில் கடைபிடித்து வீழ்த்தினர். அது என்ன உத்தி என்றால் ஒரு ஆதிகால கிரிக்கெட் உத்திதான். 2 ஸ்லிப் 2 கல்லி, பாயிண்ட் சற்று தள்ளி, கவர், மிட் ஆஃப் சற்று நெருக்கமாக. ஆன் திசையில் ஷாட் மிட் விக்கெட், ஒரு ஷாட் மிட் ஆன் நிறுத்தி ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே போட்டு வெறுப்பேற்றுவது. |
| தேடல் தொடர்பான தகவல்கள் |
|