முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > கட்டுரைகள் > கங்கூலி மீண்டும் பலிகடா?
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கங்கூலி மீண்டும் பலிகடா?
webdunia photoFILE
கிரிக்கெட்டையும் கடந்த, கிரிக்கெட் விளையாட்டு புள்ளிவிவரங்களையும் கடந்த நிலையில் அவர் புனிதப் பொருளாக மற்றப்பட்டுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் நம் மூத்த தலைகளை விடவும் அபாரமாக முரளிதரனையும், அஜந்தா மென்டிசையும் விளையாடிய சுரேஷ் ரெய்னா ஏன் இரானி கோப்பையில் இடம்பெறவில்லை?

சம்பந்தமில்லாமல் திடீரென மொகமத் க‌ய்ஃப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் விளையாடிய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் கிரிக்கெட் ரசிகர்கள், கிரிக்கெட் வர்ணனையாளர்கள், ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் எந்த ஒரு இன்னிங்சையும் க‌ய்ஃப் ஆடிவிடவில்லை, ஆனால் அவருக்கு "வாய்ப்பு" அளிக்கப்படுவதாக கூறப்படுகிறது. க‌ய்ஃப் விளையாடிய ஆஸ்ட்ரேலிய ஏ அணிக்கு எதிரான போட்டியில் பியூஷ் சாவ்லா அபாரமாக பேட்டிங் செய்ததோடு பந்து வீச்சிலும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியில் அவர் இல்லை!

இலங்கை தொடர் எதிரொலிதான் சவ்ரவ் கங்கூலியை தேர்வு செய்ய விடாமல் செய்துள்ளது என்றால், சச்சினுக்கும், திராவிடிற்கும் என்ன விதி விலக்கு? குறைந்தது இவர்கள் அனைவரையுமே தேர்வு செய்யாமல் நேரடியாக ஆஸ்ட்ரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இறக்கியிருக்கலாமே. இரானி கோப்பையில் இளம் வீரர்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று ஒரு சப்பைக்கட்டை அவிழ்த்து விட்டிருக்கலாமே!

அதாவது திராவிட், லக்ஷ்மண், கும்ளே, சச்சின் ஆகியோரையும் நாங்கள் பரிசோதனை செய்த பிறகே தேர்வு செய்வோம் என்பது போன்ற ஒரு மாயையை அணித் தேர்வு குழு ஏற்படுத்தியுள்ளது. பரிசோதனைக்கு பிறகே தேர்வு என்றால் ஏன் கங்கூலி நீக்கப்படவேண்டும்? யாரை திருப்தி செய்ய இந்த நீக்கம்?

சச்சின், செளரவ், திராவிட் ஆகிய மூவருமே 2006க்குப் பிறகு எடுத்து கொண்டால் அவர்கள் இதற்கு முன் ஆடியது போல் ரன்களையும் எடுக்கவில்லை, ஆட்ட நேர்த்தியும் வெகுவாக சீரழிந்து வந்திருக்கிறது.

இதில் செளரவ் கங்கூலியாவது அணியிலிருந்து நீக்கப்பட்டு ஏகப்பட்ட பரிசோதனைகளைக் கடந்து மீண்டும் அணிக்கு வந்துள்ளார். அதனால் திராவிட், சச்சினுக்கு கிடைத்த தொடர்ச்சியான வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை என்பதையும் நாம் கணக்கில் எடுத்து கொள்ளவேண்டும்.

நாம் திறமையை பற்றி குறிப்பிடவில்லை, அல்லது திராவிடை விட சச்சினை விட கங்கூலி சிறந்த பேட்ஸ்மெனா என்ற விவாதத்திற்குள் செல்ல வேண்டிய அவசியமுமில்லை. அந்த உயர்மட்ட கிரிக்கெட் அரங்கில் திறன் என்பது ஒப்பு நோக்கக்கூடியதல்ல. இருந்தாலும் புள்ளி விவரங்களே கிரிக்கெட்டை ஆட்டிப்படைக்கும் இந்த சூழலில் நாமும் சிறு ஒப்பு நோக்குதலை செய்வோம்.

2000 முதல் 2006-ஆம் ஆண்டு வரை திராவிட் 72 டெஸ்ட் போட்டிகளில் 6400 ரன்களை, 61.53 என்ற சராசரியில், 17 சதங்கள், 30 அரைசதங்களுடன் பெற்றுள்ளார். இதுதான் அவரது கிரிக்கெட் வாழ்வில் உச்சத்திற்கு சென்ற காலக் கட்டம். இதில் குறிப்பாக 2003ஆம் ஆண்டு 5 டெஸ்ட்களில் 100.37 என்ற உயர்ந்தபட்ச சராசரியை வைத்திருந்தார்.
<< 1 | 2 | 3  >>  
மேலும்
ஒலிம்பிக்கிற்கு இடையே ஒரு தமாஷ் கிரிக்கெட்!
கபில் தேவ் புகைப்படம் அகற்றம்! தொடரும் பழிவாங்கல்!
ஆசிய ரசிகர்களிடம் ஐ.பி.எல்.லிற்கு பலத்த வரவேற்பு!
ஐ.பி.எல். கண்டெடுத்த முத்துக்கள்!
விஜய் மல்லையாவின் பிரச்சனை என்ன?
தேய்ந்து வரும் ஆட்ட உணர்வும், பாரம்பரியமும்!