முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
அகந்தையை அடக்கு வாய் தோனி!
‘வெற்றிபெற்றவர் சொல்வதெல்லாம் வேதவாக்க’ என்ற நிலை இன்னமும் தொடர்ந்து வருகிறது. விளையாட்டு, அரசியல், கலைத்துறை என்று எதை எடுத்துக் கொண்டாலும் அதில் வெற்றிபெற்றவர்கள் எதையாவது கூறினால் அது ஏதோ புனிதமான உண்மைகள் போல் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது இந்திய கிரிக்கெட்டில் சீனியர்-ஜூனியர் பிரச்சனைகள் தலை தூக்கியுள்ளன.

webdunia photoFILE
ஆம்! இந்திய அணி இருபதுக்கு 20 உலகக் கோப்பையை வென்றது, சி.பி.தொடர் ஒரு நாள் முத்தரப்பில் சாம்பியன் பட்டம் வென்றது இவையெல்லாம், தான்(!) இளம் வீரர்களை தேர்வு செய்து அவர்களை ஊக்குவித்ததனால்தான் என்றும், விமர்சகர்களை இந்த வெற்றிகள் வாயடைத்துள்ளன என்றும், இதன் மூலம் மூத்த வீரர்களுக்கு ஒரு தெளிவான செய்தியை தான் அறிவித்திருப்பதாகவும், "திருவாளர் தோனி அவர்கள்" சமீபமாக திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.

1983இல் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் இணையில்லா தலைவர் கபில் தேவ் வெற்றி குறித்து கூறுகையில் "கடவுளின் ஆணையால்" என்றார். அவர் எந்தவித அகந்தையையும் வெளிப்படுத்தவில்லை.

webdunia photoFILE
தோனி இது போன்று கூறியது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஷரத் பவாரை எரிச்சலடையச் செய்ததா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் நேற்று நீண்ட பேட்டி ஒன்றை அளிக்கையில், சச்சின் ஆலோசனைப்படிதான் தோனி ஒரு நாள் அணித் தலைவர் பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டார் என்றும், இருபதுக்கு 20 உலகக் கோப்பை முதல் தற்போது சி.பி.தொடர் ஒரு நாள் அணியில் இளம் வீரர்களை சேர்ப்பதே முறை என்று சச்சின் டெண்டுல்கர்தான் தீவிரம் காட்டினார் என்றும் தோனிக்கு ஒரு அடி கொடுத்திருந்தார்.

மூத்த வீரர்கள் குறித்து வெளிப்படையாக கருத்துக்கள் கூறும் அளவிற்கு தோனி வளர்ந்துள்ளாரா என்பதே நமது கேள்வி. ஒரு காலத்தில் இதுபோன்று வெளிப்படையாக பேசிவிட முடியாது. தமிழக வீரர் டி.இ. ஸ்ரீனிவாசன் தனது முதல் டெஸ்டில் சுனில் கவாஸ்கரின் ஆட்டத்தை வெளிப்படையாக விமர்சித்து அணியிலிருந்தே காணாமல் போனதை நாம் அறிவோம்.

இன்று அப்படிப்பட்ட நிலை இல்லை என்பது ஆரோக்கியமானது என்றாலும், இளம் வீரரான தோனி கருத்துக்களை கூறும்போது அடக்கி வாசிப்பது அவருக்கு நல்லது. ஏனெனில் அன்றைய சூழ்நிலை இன்றும் இருந்திருந்தால், தோனியின் கிரிக்கெட் வாழ்வே கேள்விக்குறியாகியிருக்கும். ஆனால் இவர் விமர்சிக்கும் இன்றைய மூத்த வீரர்களான சச்சின், திராவிட், கங்கூலி, அனில் கும்ப்ளே ஆகியோர் கவாஸ்கர் அளவிற்கு கர்வம் இல்லாதவர்கள் என்பதால் இந்த கருத்துகளுக்குப் பிறகும் தோனி அணியில் நீடிக்க முடிகிறது.

தோனியை அறிமுகம் செய்ததும் அவரை அணியில் வைத்து பாதுகாத்ததும் மூத்த வீரர்களே. தோனி மட்டுமல்ல. விரேந்திர சேவாக் என்ற வீரரை நமக்கெல்லாம் அடையாளம் காட்டியதே சவ்ரவ் கங்கூலி என்ற மூத்த வீரர்தான். ராபின் உத்தப்பாவை அடையாளம் காட்டியது ராகுல் திராவிட். ரோஹித் ஷர்மாவை அடையாளம் காட்டியது சச்சின். யுவ்ராஜ், கயிஃப், காம்பீர் என்று அனைத்து இளம் வீரர்களையும் அவ்வப்போது அறிமுகம் செய்து வழிகாட்டி வந்தது மூத்த வீரர்களே என்பதை தோனி அறிவாரா?
1 | 2  >>  
மேலும்
டேரல் ஹேர் : ஐ.சி.சி. அந்தர்பல்டி!
இந்தியத் தொலைக்காட்சிகளை பிடித்து ஆட்டும் மூன்று!
இந்திய வெற்றி! இளமையின் வெற்றி!
ஆஸி.க்கும் காசேதான் கடவுளடா?
வணிக மயமாகும் கிரிக்கெட்! வளருமா? தேயுமா?
சாப்பல் வழியில் தோனி?