முதன்மை பக்கம் > விளையாட்டு > கிரிக்கெட் > கட்டுரைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
சாப்பல் வழியில் தோனி?
தற்போது நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் தொடர் போட்டிகளில் அணித் தேர்வில் தேவையில்லாத பரிசோதனைகளை செய்து வருகிறார் தோனி. இதனால் சுலபமாக வெற்றி பெற வேண்டிய போட்டியில் தோற்றுள்ளது இந்திய அணி.

இது போன்ற சோதனைகளை செய்வதற்கு என்ன அடிப்படை இருக்கிறது என்பது புரியவில்லை. ஆஸ்ட்ரேலிய அணிக்கு எதிராக மிகச் சிறப்பாக ஆடி வெற்றி பெற்ற அணியில் மாற்றம் செய்வதற்கு என்ன தேவை எழுந்தது என்பதுதான் புரியவில்லை.

chappel
webdunia photoWD
தோனியின் அணுகுமுறைகள் இந்திய அணியை அபாரமாக சீரழித்த கிரெக் சாப்பலையே நினைவூட்டுகிறது. சாப்பல் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற உடனேயே அணித் தேர்வு, களமிறங்கும் வரிசை முறை ஆகியவை தாறுமாறாக மாற்றி அமைத்து பரிசோதனைகளை செய்து பார்த்தார்.

அப்போது ஒரு பேட்ஸ்மெனையோ அல்லது ஒரு பந்து வீச்சாளரையோ கூடுதலாக விளையாடச் செய்யலாம் என்ற ஐ.சி.சி.-யின் அபத்த விதி நடைமுறையில் இருந்ததால் ராகுல் திராவிட் தலைமையில் 17 ஒரு நாள் போட்டிகளில் தொடர்ச்சியாக இந்தியா வெற்றி பெற்றது.

அந்த விதியை ரத்து செய்தவுடன் மலேசிய முத்தரப்பு ஒரு நாள் தொடர், ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை ஆகியவற்றில் இந்தியா படுதோல்விகளை சந்தித்தது. கிரெக் சாப்பல் பயிற்சியின் போது முதல் நிலையில் களமிறங்கும் வீரர் யார் என்றே தெரியாது. திடீரென பத்தான், திடீரென தோனி அல்லது ரெய்னா அல்லது அனுபவமற்ற ஒரு வீரர் என்று களமிறக்கப்பட்டனர்.

இந்த கோளாறுகளில் சேவாக், ஹர்பஜன், இர்பான் பத்தான் ஆகியோரது ஆட்டம் படு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. கங்கூலியை படுத்திய பாட்டில் அவர் ஆட்டத்திலா கவனம் செலுத்த முடியும்? உலகக் கோப்பை வந்தது. வீழ்ந்தோம். ஒரு அணியை கட்டமைக்கிறேன் என்று சூளுரைத்து வந்த கிரேக் சாப்பல், அணியை 'திறம்பட' கட்டுடைத்தார்.

மீண்டும் மறு கட்டுமானம் தொடங்கியது. அசட்டுத் தனமான பரிசோதனைகளுக்கு முற்றிப் புள்ளி வைத்து அணி வெற்றிகளை ஈட்டியது. ஆனால்...
1 | 2  >>  
மேலும்
சைமன்ட்சின் சிலிர்க்க வைக்கும் நேர்மை!
ஆஸி. இயந்திரத்தை உடைத்த இந்தியா!
முடிந்தும் முடியாமல் தொடரும் நிறவெறி விவகாரம்!
பீட்டர் ரீபக் வாதம் நியாயமானதா?
அணியை தூக்கி நிறுத்திய பின் கள வீரர்களின் மன உறுதி!
கங்கூலியை நீக்கிய நேரம் தவறானது!