முதன்மை பக்கம்  விளையாட்டு > கிரிக்கெட் > கட்டுரைகள்
 
இன வெறி : இந்திய ரசிகர்கள் அறியாதது!
Webdunia
webdunia photoFILE
அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையிலான 5-வது ஒரு நாள் போட்டியின் போது தன்னை இந்திய ரசிகர்கள் இன துவேஷத்துடன் கிண்டலடித்தார்கள் என்றஆஸ்ட்ரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் குற்றம் சாற்றியது மிக ஆழமாக கவனிக்கப்பட வேண்டிய குற்றச்சாற்றாகும்.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராகவோ, இந்திய ரசிகர்களுக்கு எதிராகவோ இது நாள் வரை யாரும் தெரிவிக்காத ஒரு குற்றச்சாற்றை ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் தெரிவித்துள்ளதும், அதனை ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கமும், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் கூட்டமைப்பும் ஊதிப் பெரிதாக்கியுள்ளதும், சைமன்ட்ஸின் குற்றச்சாற்று குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கமளிக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.ி.ி.) கேட்டுக் கொண்டிருப்பதும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளத் தக்கதல்ல.

மைதானத்தில் ஃபீல்டிங் செய்து கொண்டிருக்கும் வீரர்களை அவர்களின் காதுபட, பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருக்கும் ரசிகர்கள் சிலர் நகைச்சுவையுடன் ஏதாவது கூறுவது புதிதல்ல, என்றாலும் அவ்வாறு கூறப்படும் கருத்துக்கள் அல்லது கிண்டல் வார்த்தைகள் ஒரு ஆட்டக்காரரின் இனத்தைப் பற்றியதாகவோ அல்லது அவரது உடல் அமைப்பை தொடர்பு படுத்துவதாகவோ இருந்தால் அது கண்டிக்கத்தக்கதே.

அகமதாபாத்தில் நடந்தது தொடர்பாக இதுவரை வெளியான செய்திகள் மற்றும் தகவல்களைக் கொண்டு பார்த்தால், ரசிகர் ஒருவர் சைமன்ட்ஸ் கவனிக்கும் போது அவரைப் பார்த்து குரங்கு சேஷ்டை என்று நாம் கூறுவோமே அப்படி முகத்தைச் சுளித்து சைகை செய்துள்ளார் என்பது தெரிகிறது. இதனை கண்டிக்கலாம். கண்டிக்கக்கூடியதே. ஆனால், இப்படிப்பட்ட சைகை எப்படி இன துவேஷம் (இன அடிப்படையில் சிறுமைபடுத்துவது) என்று கூறிட முடியும் என்பதே கேள்வி.

ஆனால், இது இன துவேஷ அடிப்படையிலான சைகையாகவே ஆஸ்ட்ரேலிய வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் கருதுவாரேயானால், அது எப்படி இன துவேஷம் ஆகும் என்பதை அவர்தான் முதலில் விளக்க வேண்டும்.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்தின் எந்தப் பகுதியில் போட்டி நடைபெற்றாலும், அதனைப் பார்க்க வரும் ரசிகர்கள் கருத்துக் கூறுவது, கேலி பேசுவது இயல்பானதுதான். இதனையும் அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஆஸ்ட்ரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஆலன் பார்டர், முன்னாள் வீரர் மார்க் வா ஆகியோர் கூறியுள்ளனர்.

webdunia photoFILE
ஒன்றை நாம் தெளிவாகவும், உறுதியாகவும் கூறிட முடியும். இந்திய ரசிகர்களுக்கு இன துவேஷப் பார்வை என்பது இல்லை என்பதே அது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட் ஆட்டத்தில் முழுமையான ஈடுபாடு கொண்டவர்கள் என்பது மட்டுமின்றி, மற்ற நாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடும் போது ரசிகக் கூடியவர்கள், பாராட்டககூடியவர்கள்.

வெற்றி, தோல்வியை பெரிதாக எடுத்துக் கொள்பவர்கள்தான். ஆனால், வெற்றியைக் கொண்டாடுவது போல, இந்திய அணி தோல்வியடையும் போது அவர்கள் துக்கம் அனுஷ்டிப்பதில்லை. விளையாட்டில் எல்லாம் சகஜம்தான் என்பதனை யதார்த்தமாக ஏற்கும் உளப்பாங்கு கொண்டவர்கள்.
  1 | 2 | 3  >> 
மேலும்
மும்மூர்த்திகளுக்கு ஓய்வு அளிப்பது ஏன்?
இந்தியாவிற்கு உலகக் கோப்பை : பெருமைக்குரிய வெற்றி!
கிரிக்கெட் வீரர்கள் மேல் இறுகும் கண்காணிப்பு முறைகள்!
முரளிதரன் பற்றி பிஷன் சிங் பேடி கூறுவது நியாயமா?
சச்சின் டென்டுல்கரைத் தூக்கிப் பிடிக்கும் ஊடகங்கள்!
திறன் மதிப்பீட்டில்தான் தேர்வு நடக்கிறதா?