திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

2022 டி20 உலகக் கோப்பை அட்டவணை: முதல் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்!

2022 டி20 உலகக் கோப்பை அட்டவணை: முதல் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் மோதல்!
2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது
 
இந்த தொடரில் முதல் குரூப்பில் ஆஸ்திரேலியா, ஆஃப்கானிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் முதல் சுற்றிலிருந்து தகுதி பெறும் இரண்டு அணிகள் இடம்பெறுள்ளன. 
 
இரண்டாவது குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், தென்னாப்பிரிக்கா மற்றும் முதல் சுற்றிலிருந்து தகுதி பெறும் இரண்டு அணிகள் உள்ளன.
 
இந்தியா போட்டிகளின் விபரங்கள்:
 
23 அக்டோபர்: இந்தியா vs பாகிஸ்தான்  (மெல்பேர்ன்)
 
27 அக்டோபர்: இந்தியா vs ஏ2(சிட்னி)
 
30 அக்டோபர்: இந்தியா vs தென்னாப்பிரிக்கா(பெர்த்)
 
2 நவம்பர்: இந்தியா vs பங்களாதேஷ்(பெர்த்)
 
6 நவம்பர்: இந்தியா vs பி 1 (மெல்பேர்ன்)
 
நவம்பர் 9ஆம் தேதி முதல் அரையிறுதியும், நவம்பர் 10ஆம் தேதி இரண்டாவது அரையிறுதியும் நவம்பர் 13ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும்