ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 ஆகஸ்ட் 2024 (15:32 IST)

ஐசிசி தலைவராகும் ஜெய்ஷா.. அப்ப பிசிசிஐ செயலாளர் இந்த பிரபலத்தின் வாரிசா?

ஐசிசி தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்படும் நிலையில் அடுத்த பிசிசிஐ செயலாளர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

தற்போது பிசிசிஐ செயலாளராக இருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, ஐசிசி தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் இதற்காக அவர் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஜெய்ஷா ஐசிசி தலைவர் பதவி போட்டியிட்டால் அவர் கண்டிப்பாக தேர்தலில் வெற்றி பெற்று விடுவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் பிசிசிஐ செயலாளராக  இருக்கும் ஜெய்ஷா ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டு விட்டால், பிசிசிஐ அடுத்த தலைவராக முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லீ தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது இவர் டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருக்கும் நிலையில் பிசிசிஐயின் அடுத்த செயலாளராக தேர்வு செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளன.

Edited by Mahendran