திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 21 அக்டோபர் 2020 (15:44 IST)

கசப்பை மறந்து கும்ப்ளேவுக்கு வாழ்த்து சொன்ன கோலி!

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே மற்றும் விராட் கோலிக்கு இடையேயான பிரச்சனை கிரிக்கெட் ரசிகர்கள் அறிந்ததே.

இந்திய அணிக்கு பயிற்சியாளராக தேர்வான அனில் கும்ப்ளேவின் பழமையான அனுகுமுறைக்கும் கோலி போன்ற துடிப்பான கேப்டன் ஒருவரின் செயல்பாடுகளுக்கும் இடையே மோதல் எழுவது இயல்பே. அதனால் கோலியுடன் கருத்து வேறுபட்ட கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிக்கொண்டார்.

இப்போது இந்திய அணியின் பயிற்சியாளராக கோலியின் நெருங்கிய நண்பரான ரவி சாஸ்திரி இருக்கிறார். இந்நிலையில் அனில் கும்ப்ளேவுடனான கசப்பை மறந்து கோலி அவருக்கு டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.