விலாவை பதம் பார்த்த ரபாடாவுக்கு பதிலடி கொடுத்த கோலி; வைரல் வீடியோ

Virat Kohli
Last Modified ஞாயிறு, 4 பிப்ரவரி 2018 (21:18 IST)
இரண்டாவது ஒருநாள் போட்டியில் ரபாடா வீசிய பந்து கோலியின் விலாவை பதம் பார்க்க கோபமடைந்த கோலி சரியான பதிலடி கொடுத்தார்.

 
இந்தியா தென் ஆப்பரிக்காவில் சுற்றுப்பயனம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
 
டாஸ் வென்ற இந்திய பீல்டிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பரிக்க 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. 
 
இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங் செய்தபோது ரபாடா வீசிய பந்து ஓன்று கோலியின் விலாவை பதம் பார்த்தது. இதில் கோபமடைந்த கோலி ரபாடா வீசிய அடுத்த பந்தை சிக்ஸர் அனுப்பி சரியான பதிலடி கொடுத்தார்.
 
தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :