காமன்வெல்த் போட்டி : தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீரர் சுமித் மாலிக்

s
Last Modified சனி, 14 ஏப்ரல் 2018 (11:59 IST)
ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டியின் ஆண்களுக்கான  மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் சுமித் மாலிக் தங்கப்பதக்கம் வென்றார்

 
 
ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர்-வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை குவித்து வருகின்றனர். 
 
இந்நிலையில் ஆண்களுக்கான மல்யுத்த போட்டியின் 125 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டியில், நைஜீரியா வீரர் சினிவீ போல்டிக் காயம் காரணமாக விலகியதை அடுத்து அவரை எதிர்கொள்ள இருந்த இந்திய வீரர் சுமித் மாலிக்கிற்கு தங்கப்பதக்கம் கிடைத்தது. 
m
 
இதன்மூலம் இந்தியா 21 தங்கம், 13 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்கள் வென்று தொடர்ந்து மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. 


இதில் மேலும் படிக்கவும் :