1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 26 மார்ச் 2021 (12:20 IST)

பிரசித் கிருஷ்ணா ஒரு அதிசய வீரர்: சோயப் அக்தர் புகழாராம்!

பிரசித் கிருஷ்ணா ஒரு அதிசய வீரர்: சோயப் அக்தர் புகழாராம்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே புனேவில் நடைபெற்ற முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் பிரசித் கிருஷ்ணா விளையாடி இருந்தார். அவருடைய பந்துவீச்சு மிக அபாரமாக இருந்ததை அடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் பாராட்டு தெரிவித்துள்ளார். பிரசித் கிருஷ்ணா ஒரு அதிசயம் என்று அவர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார் 
 
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய பிரசித் 8.1 ஓவர்கள் வீசி 54 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அவரது பந்து வீச்சில் ஒரு கேட்ச் நழுவ விடப்பட்டது. இல்லாவிட்டால் அவர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சோயப் அக்தர் கிருஷ்ணாவின் பந்து வீச்சு குறித்து கூறுகையில் பிரசித் ஒரு கிருஷ்ணர் இல்லை, அவர் ஒரு அதிசயம். அவர் வீசிய 3 ஓவர்களில் அதிக ரன் போயிருந்தாலும், அதன்பிறகு கேப்டன் கோலி மீண்டும் அவர் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுக்க, அவர் ஒரு அதிசயம் வீரனாக மாறி அபாரமாக விக்கெட் எடுத்தார். இந்திய அணிக்கு அவரது பந்துவீச்சு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஒரு வேகப்பந்துவீச்சாளருக்கு தேவையான தைரியம் மற்றும் திறமை அவரிடம் உள்ளது. அவருக்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.