சச்சின் தெண்டுல்கர் மகனுக்கு முடிவெட்டும் அழகே தனி: வைரலாகும் வீடியோ

சச்சின் தெண்டுல்கர் மகனுக்கு முடிவெட்டும் அழகே தனி:
Last Updated: செவ்வாய், 19 மே 2020 (19:12 IST)
சச்சின் தெண்டுல்கர் மகனுக்கு முடிவெட்டும் அழகே தனி:
ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக பொதுமக்கள் திணறி வரும் விஷயங்களில் ஒன்று முடி வெட்டுதல். நாடு முழுவதும் அனைத்து முடிவெட்டும் கடைகளும் மூடப்பட்டு உள்ளதால் கடந்த இரண்டு மாதங்களாக முடியை வெட்டாமல் பலர் பரந்த தலைமுடியுடன் திரிந்து வருகின்றனர்
ஒருசிலர் தங்களுக்கு தாங்களே முடி வெட்டிக் கொண்டும் குடும்பத்தில் உள்ள ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி முடி வெட்டிக் கொண்டும் இருக்கின்றன.ர் சினிமா நட்சத்திரமும் கூட தங்கள் குடும்பத்தினருக்கு தலைமுடி வெட்டி கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவர்களும் தனது மகன் அர்ஜூன் அவர்களுக்கு முடி வெட்டியுள்ளார். இதுகுறித்த சுவராசியமான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
அர்ஜுன் டெண்டுல்கருக்கு சச்சின் முடி வெட்டும் போது அவரது மகள் சாரா உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது மகன் முடி வெட்டியவுடன் அழகாக இருக்கிறார் என்றும் இந்த கொரோனா விடுமுறை தனக்கு மேலும் ஒரு தொழிலை கற்றுக் கொடுத்துள்ளது என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். சச்சின் தனது மகனுக்கு முடி வெட்டும் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது


இதில் மேலும் படிக்கவும் :