திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 9 ஜூலை 2018 (20:07 IST)

மனைவி இல்லாமல் சதம்; ரோகித் வருத்தம்

தான் சதம் அடித்தபோது மனைவி மைதானத்தில் இல்லாமல் போனது வருத்தமாக உள்ளது என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.

 
இங்கிலாந்து அணிக்கு எதிரான நேற்றையை போட்டியில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி சதம் விளாசினார். போட்டி முடிந்த பின் ரோகித் சர்மாவிடம் தினேஷ் கார்த்திக், உங்களது மனைவி மைதானத்தில் இருந்திருந்தால் சிறப்பாக பேட்டிங் செய்வீர்கள் என அனைவருக்கும் தெரியும். ஆனால், மனைவி இல்லாமல் நீங்கள் இம்முறை சதம் அடித்துள்ளீகள் எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டார்.
 
அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா, கண்டிப்பாக எனது மனைவி இந்த ஆட்டத்தை டிவியில் பார்த்திருப்பார். இன்னும் சில நாட்களில் அவர் இங்கு வருவார். எனது சதத்தின் போது அவர் இங்கு இல்லாமல் போய்விட்டது. அது சற்று வருத்தத்தை தருகிறது. ஆனால் பரவாயில்லை, இனிவரும் போட்டிகளில் ரிதிகா இங்கு இருப்பார் என்று கூறினார்.