ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 16 ஜூலை 2018 (17:45 IST)

புல்லை தின்று வெற்றியை கொண்டாடிய வீரர்!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நான்கவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச், புற்களை தின்று தனது வெற்றியை கொண்டாடியது வியப்பை அளிக்கிறது. 
 
கிராண்ட்ஸ்லாம் அந்துஸ்து பெற்ற பாரம்பரிய டென்னிஸ் தொடரான விம்பிள்டன் டென்னிஸ் தொடர், இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்றது. 
 
இந்த ஆண்டு ஏற்கனவே, மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச், ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஃபைனலில் தென் ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார். 
 
இவர் இதற்கு முன்னர், 2011, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். இந்நிலையில் நான்கவது முறைக்கான வெற்றியை புற்களை தின்று கொண்டாடினார். 
 
இதுகுறித்து ஜோகோவிச் கூறுகையில், இந்த ஆண்டு எனது மகிழ்ச்சியை நானே இரண்டு மடங்காக மாற்றிக்கொண்டேன். டென்னிஸ் கோர்ட்டில் இருந்த புற்கள் உண்மையில் டேஸ்டாக இருந்தது என தெரிவித்துள்ளார்.