முதல் போட்டியிலேயே முத்திரை பதித்த நட்டு – 3 விக்கெட்களைக் கைப்பற்றி அபாரம்!

Last Updated: வெள்ளி, 4 டிசம்பர் 2020 (17:20 IST)

இந்திய அணியில் தேர்வாகி உள்ள நடராஜன் முதல் டி 20 போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தி முத்திரை பதித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி 20 போட்டி இன்று கான்பெராவில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த
இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி தற்போது ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.

இந்திய அணி பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் தனது முதல் டி 20 போட்டியில் சிறப்பாக பந்துவீசி 3.1 ஓவர்களில் 22 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். இதன் மூலம் அவர் இந்திய அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :