1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 25 ஜூலை 2018 (12:41 IST)

ஆஸ்திரேலிய அணி மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதா? மேக்ஸ்வெல் ஆதங்கம்

ஆஸ்திரேலிய அணி மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டது என வெளியாகியிருக்கும் செய்தி எனக்கு வேதனையை அளிக்கிறது என அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டில் ராஞ்சியில் நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் 2 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என அல்ஜீரியா ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் அந்த இரண்டு வீரர்கள் குறித்து அந்த செய்தி நிறுவனம் செய்தி வெளியிடவில்லை. ஆனாலும் அது மேக்ஸ்வெல்லாக இருக்கலாம் என பேசப்பட்டது.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய மேக்ஸ்வெல் மேட்ச் ஃபிக்ஸிங் செய்தி என்னை மிகவும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. அந்த ஆட்டத்தில் நான் சிறப்பாக விளையாடினேன். டெஸ்ட் போட்டியில் நான் முதல் சதம் அடிதேன். அதனை இன்று வரை நினைத்து பெருமைபடுகிறேன். ஆனால் அதனை கெடுக்கும் வகையில் இந்த செய்தி வெளியாகியுள்ளது.
 
இந்த மேட்ச் ஃபிக்ஸிங் செய்தி முழுவதும் தவறானவை. இதில் எந்தவித உண்மையும் இல்லை. நான் ஒருபொழுதும் கிரிக்கெட்டிற்கு எதிராக செயல்பட்டதில்லை என ஆதங்கத்துடன் பேசினார் மேக்ஸ்வெல்.