ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 29 ஜூன் 2021 (17:15 IST)

கடைசி நாளில் பாத்ரூமில் சென்று அமர்ந்துகொண்டேன்… நியுசி பவுலர் பகிர்ந்த ரகசியம்!

சமீபத்தில் நடந்து முடிந்த பரபரப்பான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிக் நியுசிலாந்து அணி இந்தியாவை வென்றது.

இரண்டரை ஆண்டுகளாக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியாவை தோற்கடித்து நியுசிலாந்து கைப்பற்றியுள்ளது. இது இந்திய ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தினாலும், இந்தியாவின் அஸ்வின் இத்தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தி கலக்கியுள்ளார் என்பது ஆறுதலை தந்துள்ளது. இந்த போட்டியின் ஐந்தாம் நாள் ஆட்டம் மிகவும் பரபரப்பாக நடந்தது.

அப்போது பதற்றம் அதிகமாக அதை தணித்துக் கொள்வதற்காக நியுசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் கைல் ஜேமிசன் சத்தம் இல்லாத பாத்ரூமில் சென்று ஒளிந்துகொண்டதாக கூறியுள்ளார்.