சதத்தை மிஸ் செய்த கில்: இலக்கை நெருங்கி வரும் இந்தியா!

சதத்தை மிஸ் செய்த கில்: இலக்கை நெருங்கி வரும் இந்தியா!
siva| Last Updated: செவ்வாய், 19 ஜனவரி 2021 (09:18 IST)
சதத்தை மிஸ் செய்த கில்: இலக்கை நெருங்கி வரும் இந்தியா!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது

328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது என்பதும் சற்று முன் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியா இன்னும் 196 ரன்கள் எடுத்தால் இந்த போட்டியில் வெற்றி பெறும் என்பதும் இந்தியா கிட்டத்தட்ட இலக்கை நெருங்கி விட்டதாகவும் கருதப்படுகிறது. ஏற்கனவே ரோஹித் சர்மா 7 ரன்களில் அவுட்டான நிலையில் சற்று முன் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கில் மிக அபாரமாக விளையாடி வந்த நிலையில் 91 ரன்களில் லியான் பந்துவீச்சில் அவுட்டானார்., அவர் சதத்தை மிஸ் செய்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
இதனை அடுத்து தற்போது கேப்டன் ரகானே களம் இறங்கி உள்ளார் என்பதும் புஜாரே 26 ரன்களுடன் களத்தில் உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணி 196 என்ற இலக்கை இந்தியா அடைந்து வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்


இதில் மேலும் படிக்கவும் :