உலக கோப்பை திருவிழாவில் முதல்முறையாக பங்கேற்கும் இந்தியா

FIFA U-17
Abimukatheesh| Last Updated: வியாழன், 5 அக்டோபர் 2017 (14:42 IST)
17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து உலக கோப்பை பேட்டியில் இந்தியா முதல்முறையாக விளையாட உள்ளது.

 

 
17 வயதுக்கு உட்பட்டோருக்கான கால்பந்து உலக கோப்பை போட்டிகள் நாளை முதல் தொடங்குகிறது. இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தப் போட்டி தற்போது இந்தியாவில் நடைபெறுகிறது. இந்திய அணி முதல்முறையாக கால்பந்து உலக கோப்பை போட்டியில் விளையாட உள்ளது.
 
இந்த உலக கோப்பை போட்டியில் 24 நாடுகள் பங்கேற்கின்றன. கால்பந்து ரசிகர்கள் அதிகம் உள்ல கொல்கத்தா, மார்க்கோ, கொச்சி, குவஹாத்தி, டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
 
உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் 24 அணிகளை 8 பிரிவுகளாக பிரித்துள்ளனர். இதில் இந்திய அணி ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளது. நடப்பு உலக கோப்பை சாம்பியனான நைஜீரியா அணி தகுதிச் சுற்றில் தோல்வியடைந்ததால் தற்போது நடைபெற உள்ள உலக கோப்பை போட்டியில் பங்கேற்க முடியவில்லை.
 
உலக கோப்பை போட்டிகள் நாளை துவங்கி 28ஆம் தேதி வரை நடைபெறும். இதில் முதல் நாளான நாளை இந்திய அணி அமெரிக்க அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி டெல்லி ஜவர்ஹலால் நேரு மைதானத்தில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :