ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 13 செப்டம்பர் 2023 (07:29 IST)

குல்தீப் யாதவ் சுழலில் வீழ்ந்த இலங்கை.. இந்தியா அபார வெற்றி..!

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணி களுக்கு இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது. 
 
நேற்றைய போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழந்து 213 ரன்கள் அடித்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 53 ரன்கள் அடித்தார். 
 
இந்த நிலையில் 214 என்ற எளிய இலக்கை நோக்கி  இலங்கை அணி விளையாட தொடங்கிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர்கள்  சீக்கிரமே அவுட் ஆனாலும் டிசில்வா மற்றும் துனித் ஆகியோர் நின்று விளையாடினார் 
 
இருப்பினும் 41.3 ஓவர்களில் இலங்கை அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 172 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது புள்ளி பட்டியலில் நான்கு புள்ளிகள் எடுத்து முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  
 
இன்னும் இரண்டு சூப்பர் 4 போட்டிகள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.  நாளை நடைபெறும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியே இந்தியாவுடன் இறுதி போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva